Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பக்கம் 30, 31..!’ – மகிழ்ச்சி தெரிவித்த ப.சிதம்பரம்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 23, 2024
in அரசியல் செய்திகள்
1
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பக்கம் 30, 31..!’ – மகிழ்ச்சி தெரிவித்த ப.சிதம்பரம்..
13
SHARES
21
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை (Union Budget 2024-25) நாடாளுமன்றத்தில் பாஜக அரசு இன்று தாக்கல் செய்தது. இதனை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், `அடுத்த ஐந்தாண்டுகளில் 500 முன்னணி நிறுவனங்களில் 5 கோடி இளைஞர்களுக்கு மாதம் 5000 ரூபாய் கொடுப்பனவுடன் (Stipend) இன்டர்ன்ஷிப் வழங்குவதற்கான திட்டம் செயல்படுத்தப்படும்’ என்று அறிவித்தார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் - Union Budget 2024-25
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் – Union Budget 2024-25

இந்த நிலையில், நிர்மலா சீதாராமன் அறிவித்த இந்த திட்டமானது காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த திட்டம் என்றும், மத்திய அரசு அதனைத் தனது பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சி என்றும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை-2024 வரைவு குழு தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் படித்திருக்கிறார் என்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் பக்கம் 30-ல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகையை (Employment-linked incentive) அவர் கிட்டத்தட்ட ஏற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

அதோடு, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் பக்கம் 11-ல் குறிப்பிடப்பட்டுள்ள, ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் கொடுப்பனவுடன் கூடிய பயிற்சித் திட்டத்தை நிதியமைச்சர் அறிமுகப்படுத்தியதிலும் மகிழ்ச்சி. காங்கிரஸ் அறிக்கையிலுள்ள வேறு சில யோசனைகளையும் நிதியமைச்சர் எடுத்திருக்கிறாரா என்பதை அறிய விரும்புகிறேன். அதில் தவறவிட்ட வாய்ப்புகளையும் விரைவில் பட்டியலிடுகிறேன். மேலும், ஏஞ்சல் வரியை நிதியமைச்சர் ரத்து செய்ததிலும் மகிழ்ச்சி. இதைத்தான் காங்கிரஸ் பல ஆண்டுகளாகக் கோரி வந்தது. இதுவும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் 31-ம் பக்கத்தில் இருக்கிறது” என்று பதிவிட்டிருக்கிறார்.

Previous Post

சென்னை கிண்டி மருத்துவமனையில் திடீர் ஆய்வுசெய்த முதலமைச்சர்; மறக்காமல் கேண்டீனிலும் விசிட்

Next Post

பிரீமியர் லீக் போட்டியில் வென்ற மதுரை ரயில்வே கிரிக்கெட் அணிக்கு பாராட்டு….

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post

பிரீமியர் லீக் போட்டியில் வென்ற மதுரை ரயில்வே கிரிக்கெட் அணிக்கு பாராட்டு….

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    கமெண்ட் செய்ய விரும்பவில்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In