மேலும் முந்தைய ஆண்டுகளில் நடந்ததைவிட கொரோனா காலத்தில் உயிரிழப்புகள் மிகவும் அதிகமாக இருந்தததை பார்க்க முடிந்தது. ஆனாலும் மோடி அரசு மிகப்பெரிய பொய், பித்தலாட்டம் பேசியது. ஆகவே உண்மையாக இறந்தவர்களில் விவரத்தை அரசு வெளியிட வேண்டும். தாய், தந்தையை இழந்த குழந்தைகளில் கல்வி செலவை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் மருத்துவ மணியாளர்கள் பலரும் இறந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் ஏற்றுக்கொள்ள முடியாத காரங்களை சொல்லி இழப்பீடு கொடுக்காமல் அரசு மவுனம் சாதித்து வருகிறது. எனவே உடனடியாக அத்தகைய மருத்துவ பணியாளர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு தொகையை வழங்க வேண்டும். இதில் அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.
ஆனால், இந்த ஆய்வு முடிவுகளை, ‘ஏற்க கூடியது இல்லை. மேலும் பல்வேறு குளறுபடிகளும் இருக்கிறது’ என மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு மறுத்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) வினோத் பவுல், “இந்த ஆய்வில் பல குளறுபடிகள் உள்ளன. எனவேதான் ஆய்வாளர்கள் தவறான முடிவுக்கு வந்துள்ளனர். மேலும், இந்தியாவின் சிவில் பதிவேடு அமைப்பில் 99% உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டன. இந்தியாவில் 2019-ம் ஆண்டை ஒப்பிடும் போது 2020-ல் 4.74 லட்சம் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன. எனவே 11.99 லட்சம் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாதது” என தெரிவித்துள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88
