பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மத்திய அரசு தயாராக இல்லை என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
ஜம்மு – காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் சாவடியை குறிவைத்து பயங்கரவாதிகள் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
கடந்த சில வாரங்களாக கதுவா, தோடா, உதம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் பொதுமக்களும், ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.
