Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கு : லிஸ்ட் போட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் – நாளை இருக்குது கச்சேரி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 21, 2024
in Default
1
பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கு : லிஸ்ட் போட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் – நாளை இருக்குது கச்சேரி!
64
SHARES
103
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. 1996 -2001 சமயத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தார். இந்த சமயத்தில் வருமானத்திற்கு அதிகமாக 1.36 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக பொன்முடிக்கு எதிராக 2001ம் ஆண்டு அதிமுக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்தது.

​பொன்முடி விடுவிப்பு

​பொன்முடி விடுவிப்பு

பொன்முடிக்கு எதிரான இந்த சொத்துக் குவிப்பு வழக்கு முதலில் விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. பின்னர் வேலூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. விசாரணை முடிவில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி அமைச்சர் பொன்முடியை வழக்கில் இருந்து விடுவித்து 2023 ஜூன் மாதம் 23ம் தேதி தீர்ப்பு வழங்கியது வேலூர் மாவட்ட நீதிமன்றம்.

​ஷாக் தந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

​ஷாக் தந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

பொன்முடி வழக்கில் வேலூர் நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை. ஆனால், பொன்முடியின் நிம்மதியை கலைத்தார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கை தாமாகவே முன்வந்து மறு ஆய்வுக்கு எடுத்து நீதிபதி அதிரடி காட்டினார். வழக்கு விசாரணை மோசமாக நடைபெற்றுள்ளது என்றும் விமர்சித்தார்.

​பொன்முடி கோரிக்கை நிராகரிப்பு

​பொன்முடி கோரிக்கை நிராகரிப்பு

சொத்துக் குவிப்பு வழக்கு இதுவரை தாமாக முன்வந்து மறுஆய்வுக்கு எடுக்கப்படாத நிலையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முடிவு பொன்முடிக்கு கடும் அதிர்ச்சியை உண்டாக்கியது. வழக்கு விசாரணையை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றார் பொன்முடி. ஆனால், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷுக்கு பாராட்டு பத்திரம் வாசித்த உச்ச நீதிமன்றம், வழக்கை எதிர்கொள்ள பொன்முடிக்கு அறிவுறுத்தியது.

விசாரணையில் பரபர வாதங்கள்

விசாரணையில் பரபர வாதங்கள்

வழக்கு விசாரணையின்போது பொன்முடி தரப்பு தனது வாதத்தில், “அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்ததால் தம்மை குற்றவாளியாக சித்தரிக்கிறார்கள்” என வாதம் வைத்தது. இதுபோலவே தீர்ப்பு வழங்கிய வேலூர் மாவட்ட நீதிபதி தரப்பிலும் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

​விசாரணை தள்ளிவைப்பு

​விசாரணை தள்ளிவைப்பு

அதே சமயம் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு கடந்த ஓராண்டு காலத்தில் பலமுறை தள்ளிவைக்கப்பட்டது. இறுதி விசாரணை தேதி அறிவிக்கப்பட்டும் பலமுறை தள்ளிப்போனதுதான் மிச்சம். கடைசியாக ஜூன் 18ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணையை ஜூலை 22ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

நாளை மீண்டும் விசாரணை

நாளை மீண்டும் விசாரணை

இந்த நிலையில் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நாளை விசாரணைக்கு பட்டியலிட்டுள்ளார். இதனால் பொன்முடி தரப்பில் பல்வேறு வாதங்களை முன்வைக்க ஆயத்தமாகி வருகிறார்கள். அடுத்தடுத்த நாட்கள் தொடர்ச்சியாக விசாரணை நடந்து வழக்கின் தீர்ப்பு தள்ளிவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றொரு சொத்துக் குவிப்பு வழக்கு

மற்றொரு சொத்துக் குவிப்பு வழக்கு

முன்னதாக 2006 – 11 காலகட்டத்தில் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் பொன்முடிக்கு உயர் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டது. இதனால் எம்.எல்.ஏ, அமைச்சர் பதவியை இழந்த பொன்முடி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தடை பெற்று மீண்டும் அமைச்சரானார்.

Previous Post

மதுரைக்கு வரப்போகும் ஜெமினி சர்க்கஸ்: மேயர் இந்திரா பொன்வசந்த் துவக்கி வைத்தார்.

Next Post

ரூ.2 கோடி கேட்டு சிறுவன் கடத்தல்: ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி தற்கொலை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ரூ.2 கோடி கேட்டு சிறுவன் கடத்தல்: ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி தற்கொலை

ரூ.2 கோடி கேட்டு சிறுவன் கடத்தல்: ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி தற்கொலை

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    உயர் நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு நீதி அரசர் ஆனந்த் வெங்கடேஷ் அவர்களின் செயல் வரவேற்கப்பட வேண்டியது நான் வரவேற்கிறேன்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In