மதுரைக்கு வரப்போகும் ஜெமினி சர்க்கஸ் துவக்க நிகழ்ச்சியில் துணை மேயர் நாகராஜன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். உடன் கவுன்சிலர் பாண்டிச்சேரி மகாலட்சுமி அழகு சுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து சாகச கலைஞர்களின் சர்க்கஸ் நிகழ்ச்சி நடந்தது ஜெமினி சர்க்கஸ் குறித்து அதை இயக்குனர் திவாகர் மேலாளர் டைட்டஸ் வர்கீஸ் ஆகியோர் நிறுவர்கள் கூறியதாவது, ஜெமினி சர்க்கஸ் 1951 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.
பழமை வாய்ந்த இந்த சர்க்கஸில் சிங்கம் புலி கரடி யானை குரங்கு உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் சர்க்கஸில் இடம் பெற்று இருந்தன இந்நிலையில் விலங்குகள் நலவாரியம் 1999 விலங்குகளை பயன்படுத்த தடை விதித்தது. இன்றைய தினத்திலிருந்து விலங்குகளை சர்க்கஸில் பயன்படுத்துவதில்லை. மேலும் 2016 ஆம் ஆண்டில் இருந்து யானையும் பயன்படுத்தக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டது அதைத் தொடர்ந்து சர்க்கஸில் எந்த ஒரு விலங்குகளும் பயன்படுத்துவதில்லை. நிகழ்ச்சியும் நடத்துவதில்லை. மக்களை மகிழ்விக்கும் வண்ணம் ஜிம்னாஸ்டிக் கலைஞர்களை கொண்டு சாகச நிகழ்ச்சிகளை சர்க்கஸில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்காக ரஷ்யா தான்சியா எத்தியோப்பியா நேபாளம் அசாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 150 க்கும் மேற்பட்ட ஜிம்னாஸ்டிக் இளைஞர்களை கொண்டு பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர் இதில் அந்தரத்தில் தொங்கும் கம்பியில் விளையாடுவது கூண்டுகளுக்குள் மோட்டார் சைக்கிள் சாகசம் ஜிம்னாஸ்டிக் நிகழ்ச்சி போன்ற பொதுமக்களை கவரும் வண்ணமாக 2 மணி நேரம் நடைபெற்ற நிகழ்ச்சிகள் தினமும் மதியம் 1 மணி 4 மணி இரவு 7 மணி நடைபெறுகிறது.




🌹🌹🌹🌹