Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

முஸ்லிம், கிறிஸ்தவர் தனி சட்டங்களை பறிக்கும் பொது சிவில் சட்டம்- மக்கள் ஒற்றுமை மேடை கடும் எதிர்ப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 17, 2023
in அரசியல் செய்திகள்
0
முஸ்லிம், கிறிஸ்தவர் தனி சட்டங்களை பறிக்கும் பொது சிவில் சட்டம்- மக்கள் ஒற்றுமை மேடை கடும் எதிர்ப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

Chennai oi-Mathivanan Maran
Published: Saturday, June 17, 2023, 22:18 [IST]
சென்னை: முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கான தனிச் சட்டங்களைப் பறிக்கக் கூடிய பொது சிவில் சட்டம் குறித்து சட்ட ஆணையம் கருத்து கேட்பதற்கு மக்கள் ஒற்றுமை மேடை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர்கள் பேரா. அருணன், க. உதயகுமார் ஆகியோர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவின் சட்ட ஆணையமானது பொது சிவில் சட்டம் பற்றிய கருத்து கேட்புக்கு ஜுன் 14 அன்று அறிவிக்கை வெளியிட்டுள்ளது. முப்பது நாட்களுக்குள் அது பற்றிய கருத்துக்களை அதற்கு அனுப்பிவைக்க வேண்டும் என்றும் கெடு விடுத்தள்ளது. ஆர்எஸ்எஸ்சின் நிகழ்ச்சி நிரலைச் செயல்படுத்தும் வேலையில் சட்ட ஆணையம் இறங்கியிருப்பதை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வன்மையாகக் கண்டிக்கிறது. பாபர் மசூதியை இடித்து அங்கே ராமர் கோயில் கட்டுவது, ஜம்மு-காஷமீரின் 370ஆவது பிரிவை ரத்து செய்வது, பொது சிவில் சட்டத்தை கொண்டுவருவது என்பதே ஆர்எஸ்எஸ்சின் திட்டமாகும். அதில் முதல் இரண்டை முடித்துவிட்டவர்கள், இப்போது மூன்றாவதையும் செயல்படுத்த துணிந்திருக்கிறார்கள். இதற்காகத்தான் சட்ட ஆணையத்தை தங்களது மோடி அரசின் மூலம் தூண்டியிருக்கிறார்கள். இதற்கு முந்தைய சட்ட ஆணையம் இது பற்றி மக்களின் கருத்து கேட்டு, தனது முடிவை 2018இல் தந்திருக்கிறது என்பதை தற்போதய அறிவிக்கை ஒப்புக்கொள்கிறது. அந்த முடிவு, “பொது சிவில் சட்டம் அவசியமானதும் அல்ல, தற்போதய சூழலில் விரும்பத்தக்கதும் அல்ல” என்பதுதான். அதைச் சொல்லாமல் அது வந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால் மீண்டும் மக்களிடம் கருத்து கேட்கிறோம் என்கிறது தற்போதய சட்ட ஆணையம். பொது சிவில் சட்டம்.. கருத்து கேட்கும் மத்திய அரசு.. 2024 தேர்தலுக்கு பாஜகவின் பக்கா பிளான்.. அதிருதே இது போன்ற அடிப்படையான விஷயங்களில் சில ஆண்டுகளிலேயே நிலைமை நிச்சயம் மாறாது. ஆனாலும் ஆணையம் மீண்டும் விஷயத்தை கிளப்புவது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்தும் பாஜக அரசின் இழிசெயலுக்கு துணை போவதே என்பதை சுட்டிக் காட்டுகிறது மேடை. இந்துச் சட்டத்தில் முற்போக்கான திருத்தங்களை அண்ணல் அம்பேத்கரும், பிரதமர் நேருவும் 1950களில் முன்மொழிந்த போது அவற்றை கடுமையாக எதிர்த்தது ஆர்எஸ்எஸ். இப்போது பொது சிவில் சட்டம் என்று இவர்கள் கிளம்புவது முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களது தனி சட்டங்களை பறிக்கும் வேலையே. அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டின் சுயமரியாதை மற்றும் சீர்திருத்த திருமணங்களின் சட்ட அங்கீகாரத்தையும் ரத்து செய்து புரோகித திருமண முறையை அனைவர் மீதும் திணிக்கிற காரியமுமாகும்.இந்தக் கருத்துக் கேட்கும் அறிவிக்கை தேன்கூட்டைக் கலைக்கிற செயல். இதை உடனடியாக சட்ட ஆணையம் திரும்பப் பெற வேண்டும் என்று மக்கள் ஒற்றுமை மேடை வலியறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications
You have already subscribed English summary
TNPPUNITY leaders Prof. Arunan, SP Udhayakumar opposed to Uniform Civil Code.
Story first published: Saturday, June 17, 2023, 22:18 [IST]

.

Previous Post

Exclusive: 230 கோடி… 15 மாதங்கள்…! கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை!

Next Post

தி.மலை | பிரசவத்தில் தாயும், சேயும் உயிரிழப்பு: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முற்றுகை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தி.மலை | பிரசவத்தில் தாயும், சேயும் உயிரிழப்பு: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முற்றுகை

தி.மலை | பிரசவத்தில் தாயும், சேயும் உயிரிழப்பு: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முற்றுகை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In