நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் வாய்மேடு சரக்கத்திற்கு உட்பட்ட தானி கோட்டகம் மாதா கோவில் அருகில் வாய்மேடு காவல்துறையினர் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் வாகன சோதனை நடத்தப்பட்டது வாகனங்களில் கொண்டு வரும் மளிகை பொருட்களை போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருகிறதா என்பதனை முழு ஆய்வுக்கு பின் வாகனங்களை சோதனையிட்டு அனுப்புகின்றனர்கள். மேலும் குட்கா பான்பரக் ஹான்ஸ் போன்ற பொருட்கள் கடத்தப்பட்டு வரும் நிலையில் வாகன சோதனையின் போது தரவாக ஆய்வு செய்து அனுப்பப்படுகிறது. இது பொதுமக்கள் வணிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும்மகிழ்ச்சியை உண்டாக்குகிறது. வாய்மேடு காவல்துறைக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்கள்.

ஒருவேளை குட்கா என்கிற ஹான்ஸ் கொண்டு வந்தாலும் காவல்துறையினரின் ஆதரவு இல்லாமல் கடைகளில் விற்பனை செய்ய இயலாது எனவே காவல்துறையினர் கடையில் விற்பனை செய்வது தெரிந்தால் கடுமையான நடவடிக்கை எடுத்தாலே போதுமானது