மேற்குவங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் மீது ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் ஒப்பந்தப் பெண் பணியாளரே பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அமர்வில் ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகிய நீதிபதிகளும் இடம்பெற்றனர்.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மேற்குவங்க அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கமெண்ட் செய்ய விரும்பவில்லை