ஓட்டுக்குப் பணம்: மாணவர்களிடம் விஜய் பேசிய ‘அரசியல்’!
நடிகர் விஜய் அரசியலுக்கு வரக்கூடும் எனப் பேச்சுகள் எழுந்துள்ள நிலையில், இன்று நடந்த கல்வி விருதுகள் வழங்கும் விழாவில் அவர் பேசிய ‘அரசியல்’ பேச்சு கவனத்தை ஈர்த்துள்ளது.
2023-ம் ஆண்டு நடந்து முடிந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பெற்றுச் சாதித்த மாணவ, மாணவிகளுக்கு நடிகர் விஜய் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத் தொகை வழங்கி கௌரவித்திருக்கிறார்.
மாணவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் மேடையில் அவர்களைப் பாராட்டிக் கௌரவித்த விஜய், இந்நிகழ்வில் பல விஷயங்கள் குறித்தும் பேசினார்.
கல்வி தொடர்பாகவும் மட்டுமல்லாது, பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப்போடுவதற்கு எதிராகவும் பேசி அரசியல் உள்ளிட்ட பல தளங்களைத் தொட்டுச் சென்றார்.
சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் வைரலான விஜயின் பேச்சை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…

