Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் கொலையில் அவிழும் மர்ம முடிச்சுகள்! திமுக நிர்வாகியின் மகனை தட்டித்துக்கிய போலீஸ்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 17, 2024
in அரசியல் செய்திகள்
1
ஆம்ஸ்ட்ராங் கொலையில் அவிழும் மர்ம முடிச்சுகள்! திமுக நிர்வாகியின் மகனை தட்டித்துக்கிய போலீஸ்!
156
SHARES
252
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுக நிர்வாகியின் மகன் சதீஷ் என்பவரை போலீசர் கைது செய்து உள்ளனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில் கொலை செய்யப்பட்டார்.

ஏற்கெனவே 11 பேர் கைது

இந்த வழக்கு தொடர்பாக கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு , ராமு, திருவேங்கிடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், கோகுல், சக்தி, சந்தோஷ், அருள், சிவசக்தி உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவேங்கிடம் என்கவுண்டர்

இந்த நிலையில் காவலர்களை தாக்கிவிட்டு தம்பிக்க முயன்றதாக கூறி திருவேங்கிடம் என்பவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பிரபல தாதாவின் மனைவியும் வழக்கறிஞருமான் மலர் கொடி மற்றும் ஹரிஹரன் ஆகியோரை செம்பியம் போலீசார் கைது செய்து உள்ளனர். கைது செய்யப்பட்ட 6 பேரிடம் காவல்துறையினர் இன்றைய தினம் விசாரணை நடத்தினர்.

இதில் கைது செய்யப்பட்டு உள்ள திமுக வழக்கறிஞர் அருண் என்பவரின் மனைவி உடன் மறைந்த பிரபல தாதாவின் மனைவி மலர்கொடி தொடர்பில் இருந்ததாக கூறப்படுகின்றது. இவர்களுக்கு இடையே நடைபெற்ற பணப்பரிவர்தனை குறித்தும் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகின்றது.

திமுக நிர்வாகியின் மகன் கைது

இதனிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக சதீஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். இவரது தந்தையான குமரேசன், திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளராக பொறுப்பு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் கொலை

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் வெட்டிக் கொல்லப்பட்டார். பெரம்பூரில் உள்ள அவரது இல்லம் அருகே வெளியில் நின்று கொண்டு இருந்த ஆம்ஸ்ட்ராங்கை, உணவு டெலிவரி ஊழியர்கள் போர்வையில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் வெட்டிவிட்டு தப்பி சென்றது.

அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்

இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி சென்னை வர உள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். மேலும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்க்கெட்டு விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

எழும்பூரில் பேரணி அறிவிப்பு

ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்து நீலம் அமைப்பு சார்பில் சென்னையில் பேரணி நடத்தப்படும் என்றும் இயக்குநர் பா.ரஞ்சித் அறிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்து வரும் ஜூலை 20ஆம் தேதி மாலை 3 மணி அளவில் எழும்பூரில் உள்ள ரமடா ஹோட்டலில் தொடங்கும் பேரணி ராஜரத்தினம் அரங்கம் அருகில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Previous Post

துபாய் இளவரசியின் விவாகரத்துக்கு குவியும் பாராட்டுகள்!

Next Post

ஒலிம்பிக் பாதுகாப்புக்குச் செல்லும் இந்திய ராணுவத்தின் நாய்கள்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஒலிம்பிக் பாதுகாப்புக்குச் செல்லும் இந்திய ராணுவத்தின் நாய்கள்!

ஒலிம்பிக் பாதுகாப்புக்குச் செல்லும் இந்திய ராணுவத்தின் நாய்கள்!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    ❤️❤️❤️👌

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In