உலகே வியந்து பார்க்கும் வகையில் இந்தியாவின் நம்பர் ஒன் தொழிலதிபரும், ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இல்லத் திருமண விழா நடந்து வருகிறது.
முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ஹெல்த்கேர் நிறுவன தலைமை செயல் அதிகாரி விரேன் மெர்ச்சன்டின் மகள் ராதிகா மெர்ச்சன்டின் திருமணம் மும்பையில் வெள்ளிக்கிழமையன்று கோலாகலமாக நடைபெற்றது.
வானில் உள்ள நட்சத்திரங்கள் எல்லாம் தரையில் இறங்கி வந்தது போன்று, ஆயிரக்கணக்கான உலக பிரபலங்கள் அனைவரும் ஒருங்கே சங்கமித்த இந்த திருமண வைபோகத்தின், 2 ஆவது நாளில் மணமக்கள் ஆசிர்வாதம் பெறும் நிகழ்வான “சுப ஆசிர்வாதம்” விமர்சையாக நடைபெற்றது.
மொத்தம் 3 நாட்களுக்கு நடைபெறும் அனந்த் அம்பானி-ராதிகா திருமணத்தின் 2ஆவது நாள் நிகழ்வாக, மூத்தோர்கள், குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவரும் புதுமண தம்பதிக்கு ஆசிர்வாதம் வழங்கினர்.
விருந்தினர்கள் திரண்டு இருக்கும் அரங்கிற்கு மத்தியில் புதுமண தம்பதி, நடந்து செல்லும் போது, ரோஜா இதழ்களையும் அரிசியும் தூவி சகல சௌபாக்கியங்களையும் பெற வேண்டும் என உற்றார் உறவினர்களும், பெரியோர்களும் வாழ்த்தும் பொருட்டு இந்த சுப ஆசிர்வாதம் நிகழ்வு நடத்தப்படுகிறது.
அனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் தம்பதிகளான பின்பு நடக்கும் இந்த முதல் நிகழ்விற்காக, திருமணம் நடந்த ஜியோ சர்வதேச மாநாட்டு மையத்திலே பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மணமகன் அனந்த் அம்பானி சிவப்பு நிற வேலைபாடுகள் நிறைந்த ஷர்வாணி அணிந்திருந்தார்.
இசைவாசிக்கும் பெண் கலைஞர்கள், தெய்வீக உணர்வு தரும் யானைகள் உள்ளிட்டவற்றின் வடிவமைப்புகளுடன் பிரம்மாண்டமாக இத்தாலி ஆடை கலைஞர்களால், மணமகள் ராதிகாவின் லெஹங்கா வடிவமைக்கப்பட்டிருந்தது.
கங்கை நதி பாயும் வாரணாசியை கண்முன் நிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த அரங்கிற்குள் புதுமண தம்பதிகள் வந்த நிலையில், சங்கர் மகாதேவன், ஸ்ரேயா கோஷல், கவுஷிக் சக்கரபோர்தி, சோனு நிகாம், ஹரிஹரன் உள்ளிட்ட பிரபலங்கள் இசை மழையில் மணமக்களை வாழ்த்தினர்.
#WATCH | Shankar Mahadevan, Shreya Ghoshal, Kaushiki Chakraborty, Sonu Nigam, Hariharan and others sing popular bhajan ‘Ram Ram Jai Raja Ram’ at Anant Ambani and Radhika Merchant’s ‘Shubh Aashirwad’ ceremony in Mumbai. pic.twitter.com/ZZDj7eUG02
— ANI (@ANI) July 13, 2024
மணமக்களை வாழ்த்துவதற்காக பிரதமர் மோடி வந்த நிலையில், அவரை முகேஷ் அம்பானி மற்றும் நீடா ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அனந்த்-ராதிகா தம்பதியிடம் சென்ற பிரதமர் மோடி, அவர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கினார். அனந்த் மற்றும் ராதிகாவுக்கு பிரதமர் மோடி தனது திருமண பரிசை வழங்கினார். அப்போது, பிரதமரின் காலை தொட்டு புதுமண தம்பதி ஆசீர்வாதம் பெற்றனர்.
ये होते है संस्कार . pic.twitter.com/QdisboMa0w
— Navodit (@yogisewakgkp) July 13, 2024
சுப ஆசிர்வாத் நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக நடந்த வீணை, மிருதங்கம் உள்ளிட்டவற்றின் பாரம்பரிய இசை கச்சேரி, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை மெய்மறக்க வைத்தது.
Baraat of the year
🥰❤️💯💫 #ARWeddingCelebrations.#AnantAmbani pic.twitter.com/B21Ex9HgPx
— Aashu (@Aashu139332) July 14, 2024
துவாரகா பீடத்தின் சங்கராச்சாரியார் சதானந்த சரஸ்வதி, துளசி பீடத்தின் நிறுவனர் தலைவர் ஜகத்குரு ராமபத்ராச்சார்யா, ஜோதிர்மத் சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் ஆகியோர் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் சுப ஆசிர்வாத விழாவில் பங்கேற்றனர். அவர்களுக்கு பூரணகும்ப மரியாதை அளித்து முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானி வரவேற்றனர்.
பின்னர் புதுமண தம்பதிகளுக்கு சதானந்த சரஸ்வதிகள், ஜகத்குரு ராமபத்ராச்சார்யா, அவிமுக்தேஷ்வரானந்த் சங்கராச்சாரியார் உள்ளிட்டோர் ஆசிர்வாதங்களை வழங்கினர்.’
.

😈😈😈😈😈😈😈👺👺👺👺👺👺👺👹