Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

நாங்க எம்ஜிஆரோ ஜெயலலிதாவோ கிடையாது.. அதுவே இப்போ தான் புரியுது.. செல்லூர் ராஜு வேதனை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 15, 2024
in Default
1
நாங்க எம்ஜிஆரோ ஜெயலலிதாவோ கிடையாது.. அதுவே இப்போ தான் புரியுது.. செல்லூர் ராஜு வேதனை
23
SHARES
37
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மதுரை: மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக தோற்றதில் நாங்களே வேதனையில் இருக்கிறோம். நாங்களும் மக்களிடம் பேசினோம். அவர்களை அழைத்தோம். நாங்கள் ஒன்றும் எம்ஜிஆரோ, ஜெயலலிதாவோ கிடையாது எனவும் செல்லூர் ராஜு தெரிவித்தார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. ஒரு தொகுதியில் கூட ஜெயிக்கவில்லை என்பதோடு மட்டுமல்லாமல், பல தொகுதிகளில் அக்கட்சி டெபாசிட்டையும் இழந்தது. இந்த தோல்வியானது அதிமுகவினரை விரக்தியடையச் செய்துள்ளது. இதையடுத்து, இந்த தோல்வி குறித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொகுதிவாரியாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் கடந்த முறை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், செல்லூர் ராஜு மதுரையில் சரியாக தேர்தல் பணி செய்யவில்லை என சில நிர்வாகிகள் புகார் அளித்தனர்.

இந்நிலையில், இன்று காமராஜர் பிறந்தநாளையொட்டி மதுரையில் உள்ள அவரது சிலைக்கு செல்லூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நகிழ்ச்சியில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து செல்லூர் ராஜு பேசியதாவது:

நாங்கள் என்ன புரட்சித் தலைவர் எம்ஜிஆரா.. இல்லையென்றால் புரட்சித் தலைவி ஜெயலலிதாவா? நாங்களும் மக்களிடம் பிரச்சாரம் செய்தோம். அவர்களை அழைத்தோம். மதுரையில் வேட்பாளர் சரவணனை ஆதரித்து வெயிலிலும் மழையிலும் கூவி கூவி தானே பிரச்சாரம் செய்தோம். இதுக்கு மேலே எப்படி கட்சிக்கு வேலை பார்க்க முடியும்? குறிப்பிட்ட சமுதாயம் என்ன செய்தார்கள்.. இந்தியாவின் பிரதமராக மோடி வர வேண்டும் என்று பாஜகவுக்கு வாக்களித்தார். சிறுபான்மையின மக்கள் ராகுல் காந்தி வர வேண்டும் என வாக்களித்தார். இதில் நாங்கள் அடிபட்டு விட்டோம்.

மதுரை அதிமுகவோட கோட்டை தான். அது எங்களுக்கே தெரியும். இங்கு தோற்றது எங்களுக்கே மன உளைச்சல் தான். ஆனால் மக்கள் இப்படி முடிவெடுத்து விட்டார்கள். நாங்கள் என்ன செய்ய முடியும்? சிறுபான்மையினர்கள் எங்களை நம்பவில்லை. நாங்கள் எவ்வளவோ சொல்லி பார்த்தோம். ஆனாலும் அவர்கள் எங்களை ஆதரிக்கவில்லை. வேறு என்ன தான் செய்ய முடியும்? இவ்வாறு செல்லூர் ராஜு கூறினார்.

Previous Post

துணைமுதல்வர் சிவகுமார் மீதான வழக்கு: உச்சநீதிமன்றம் கிடுக்குபிடி..

Next Post

‘எனக்கு தெரிந்தது எல்லாம் சாப்பாடு, தண்ணீர், பொண்டாட்டி தான்’..!! வரலட்சுமியின் கணவர் நிக்கோலாய் சச்தேவ்..!!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘எனக்கு தெரிந்தது எல்லாம் சாப்பாடு, தண்ணீர், பொண்டாட்டி தான்’..!! வரலட்சுமியின் கணவர் நிக்கோலாய் சச்தேவ்..!!

'எனக்கு தெரிந்தது எல்லாம் சாப்பாடு, தண்ணீர், பொண்டாட்டி தான்’..!! வரலட்சுமியின் கணவர் நிக்கோலாய் சச்தேவ்..!!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    எல்லாமே தங்களுக்கு தோல்வி அடைந்த பிறகு தான் புரியும் முன்னாள் அமைச்சர் தெர்மாகோல் ராஜு அவர்களே. நீர் நிரம்பிய குளத்தை தெர்மாகோல் போட்டு மூடிய அறிவாளி தானே தாங்கள்.

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In