திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பின்புறம் உள்ள பெரியகுளம் என்று அழைக்கப்படும் குளமானது கைலாசநாதர் திருக்கோவிலுக்கு சொந்தமானது என்றும் இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் செயல் அலுவலர் அவர்கள் பராமரிப்பில் உள்ளது.
அந்த குளத்தில் சுமார் 30 அடி ஆழத்திற்கு மணல்களை பொக்லின் இயந்திரம் மூலம் டிப்பர் லாரிகளை வைத்து மணல், களிமண் கடத்துகிறார்கள்.
கனிமவளங்களை கடத்தும் இந்த மாஃபியாக்களை கனிமவளத்துறை அதிகாரிகள், வருவாய் வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் என யாரும் கண்டுக்கொள்வது இல்லை என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
தமிழ்நாடு அரசு அறிக்கையில் நிலத்தடி நீரை சேமிக்கும் விதமாக பல திட்டங்களை வெளியிட்டு வருகிறது. இருப்பினும் மணலை அள்ளிய பின் எப்படி நிலத்தடி நீரை சேமிக்க முடியும் என்று அப்பகுதி மக்கள் கேட்டு வருகின்றனர். இந்த மாபியாக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
