திருவாரூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக மாவட்ட காவல்துறை சார்பில் ஆயுதப்படை மைதானத்தில் திறக்கப்பட்டுள்ள உணவகத்திற்கு அடிப்படை கட்டுமான பணிகளில் பெண் காவலர்களை ஈடுபடுத்தியுள்ளனர்.
சித்தாட்கள் போன்று காவலர்களை பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது ஒன்றாகும், கடுமையான பணி பளுவிற்கு இடையில் இது போன்ற உடலை வருத்தும் பணிகளில் பெண்களை ஈடுபடுத்துவது என்பது மனித நேயமற்ற செயல் மற்றுமன்றி அவர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை தரக்கூடிய ஒன்றாகும்…
தற்போது காவல்துறை இருக்கும் இக்கட்டான சூழ்நிலையில் காவலர்கள் ஒரு இறுக்கத்துடனே பணியாற்ற வேண்டிய அவல சூழ்நிலை உள்ளது. இதில் இது போன்ற சித்தரவதையான பணிகளில் திருவாரூர் மாவட்ட காவல் துறை பெண்களை ஈடுபடுத்துவதை உடனே நிறுத்தவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
