Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பொய்யாக “மாற்றுதிறனாளி” சான்றிதழ் வாங்கி, பெயரை Gazette-ல் மாற்றி முறைகேடாக IAS ஆன அதிர்ச்சி பெண் அதிகாரி..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 15, 2024
in Default
0
பொய்யாக “மாற்றுதிறனாளி” சான்றிதழ் வாங்கி, பெயரை Gazette-ல் மாற்றி முறைகேடாக IAS ஆன அதிர்ச்சி பெண் அதிகாரி..
64
SHARES
103
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் பயிற்சி பெண் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றியவர் பூஜா கேட்கர். இவர் பயிற்சியின்போது தனது அதிகாரத்துக்கு மீறிய சில நடைமுறைகளை செய்துகொண்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. அதாவது சொந்த வாகனத்தில் மகாராஷ்டிர அரசு என்று ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டதோடு, சைரன் ஒலியையும் பொருத்திக்கொண்டார். மேலும், புனே கூடுதல் கலெக்டர் அஜய் மோரே வெளியே சென்றபோது, அவரது அறையை முன் அனுமதியின்றி பூஜா கேட்கர் அபகரித்துக்கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதவிர, பூஜாவின் தந்தை ஓய்வுபெற்ற நிர்வாக அதிகாரி என்றும், அவர் அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார் என்றும், தனது மகளின் விருப்பங்களை நிறைவேற்றுமாறு ஆட்சியர் அலுவலக ஊழியர்களுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பூஜாவின் தந்தைக்கு 40 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகவும், ஆனால் இவரோ ஓபிசி பிரிவின்கீழ் இப்பதவிக்குத் தேர்வாகியிருப்பதாகவும், இவரது தேர்வே கேள்விக்குறியாக இருப்பதாகவும் சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் மீது எழுந்துள்ள முறைகேடுகள்:

தான் ஒரு பார்வை குறைபாடு உள்ளவர் மற்றும் மனநலம் குன்றியவர் என்று மாற்று திறனாளிகள் கோட்டா-வில் IAS பதவி வாங்கியுள்ளார். ஆனால் தான் ஒரு மாற்றுத்திறனாளி என்று இன்று வரை நிருபிக்கவில்லை என்று தெரியவருகிறது.

AIIMS மருத்துவர்களின் பரிசோதனைக்கு 6 முறை இவர் போகாமல் தவிர்த்துள்ளார். ஆக இவர் மாற்றுத்திறனாளி என்று நிரூபிக்கப்படாமலேயே பதவியில் சேர்ந்துள்ளார் இதுவும் UPSC மீது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

இதுமட்டும் இல்லாமல் IAS தேர்வில் 2019ம் ஆண்டு ஒருமுறை இதேபோல் கொடுத்த மாற்றுத்திறனாளி சான்றிதழ் முறைகேடானது என்று நிருபிக்கப்படதால் இனி தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த தடவை தனது பெயரை Gazette-ல் மாற்றி வேறு பெயரில் விண்ணப்பித்து முழுவதும் முறைகேடாக IAS பதவி பெற்றுள்ளார் என்று தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுமட்டுமில்லாமல் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் சிறப்பு சலுகையான Scribber உதவியை பெற்றுள்ளார். அதாவது மாற்றுத்திரனாளியான இவருக்கு பதில் வேறொரு நபர் பரிட்சை எழுத அனுமதிப்பது. இதன் மூலம் இவருக்காக பரீட்சை எழுதிய நபருக்கு ஒரு பரீட்சைக்கு ரூ.2 லட்சம் வீதம் 9 பரீட்சைக்கு ரூ.18 லட்சம் கொடுத்து பரீட்சை எழுதியுள்ளார் என்றும் தெரிய வருகிறது.

இப்படி அவரது மீதான புகார்கள் தொடர்ந்து உயர் அதிகாரிகளுக்குச் செல்லவே புனே கலெக்டர் சுஹாஸ் திவாஸ், மகாராஷ்டிர தலைமைச் செயலாளரிடம் இதுகுறித்து விளக்கமளித்தார். அதன்பேரில் அவர், கேத்கர் வாஷிமுக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். என்றாலும், அவர் பற்றிய தகவல்கள் தொடர்ந்து வெளிவந்தபடியே உள்ளன.

தற்போதுகூட, இவரின் தாய் மனோரமா கேட்கர், விவசாயி ஒருவரின் நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றபோது, அந்நிலத்திற்கு சொந்தமான விவசாயி தர இயலாது என எதிர்த்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மனோரமா தனது பாதுகாவலர்களுடன் கையில் துப்பாக்கியுடன் சென்று, அந்த விவசாயியை மிரட்டியுள்ளார். இதனை உள்ளூர் நபர் ஒருவர் விடியோவாக பதிவு செய்யவே, இது சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. மேலும், இந்நபர் அளித்த புகாரின் பேரில் பூஜா கேட்கர் பெற்றோரும் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

இந்த நிலையில், பூஜா மீதான இரண்டு புகார்கள் குறித்தும் மத்திய மற்றும் மாநில அரசுகள் விசாரணை நடத்த ஆரம்பித்துள்ளன. மத்திய அரசு நடத்தி வரும் விசாரணை அறிக்கை விபரம் மகாராஷ்டிரா அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், அதன் அடிப்படையில் மகாராஷ்டிரா அரசு பூஜாவை பணி நீக்கம் செய்யலாம் என்றும், தவறு உறுதி செய்யப்பட்டால் பூஜா மீது கிரிமினல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதனால் அவரது பதவி பறிக்கப்படலாம் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விவகாரம் குறித்து முதல்முறையாக பேட்டியளித்த பூஜா கேட்கரின் தந்தை திலீப் கேட்கர், “என் மகள் எந்தத் தவறும் செய்யவில்லை. இதுகுறித்து விசாரிக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. எனவே இறுதி முடிவுக்காக காத்திருப்போம். யாரோ வேண்டுமென்றே என் மகளை மாட்டிவிட முயற்சி செய்கிறார்கள். இதுகுறித்து விசாரணைக் குழுவின் முன் எங்களின் கருத்தை முன்வைப்போம். சட்டப்பூர்வ செயல்முறை நடந்து கொண்டிருக்கிறது. எனவே இந்த விஷயத்தில் நாங்கள் கருத்து தெரிவிக்க முடியாது. எது நடந்தாலும் எல்லாமே விதிப்படிதான் நடந்தது, எந்த தவறும் இல்லை.” என்றார்.

Previous Post

சென்னையில் மீண்டும் வருது டபுள் டக்கர் பேருந்துகள்! பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி! எந்த ரூட்டில் ஓடும்?

Next Post

கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ், ஹர்பஜன், ரெய்னா ஆகியோர் மாற்றுத்திறனாளிகளை கேலி செய்யும் வீடியோ: எழும் கடும் விமர்சனங்கள்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ், ஹர்பஜன், ரெய்னா ஆகியோர் மாற்றுத்திறனாளிகளை கேலி செய்யும் வீடியோ: எழும் கடும் விமர்சனங்கள்..

கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ், ஹர்பஜன், ரெய்னா ஆகியோர் மாற்றுத்திறனாளிகளை கேலி செய்யும் வீடியோ: எழும் கடும் விமர்சனங்கள்..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In