Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பாலத்தில் போட்டோ ஷூட்.. ரயில் வந்ததால் 90 அடி பள்ளத்தில் குதித்த புதுமண தம்பதி..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 15, 2024
in அரசியல் செய்திகள்
0
பாலத்தில் போட்டோ ஷூட்.. ரயில் வந்ததால் 90 அடி பள்ளத்தில் குதித்த புதுமண தம்பதி..
180
SHARES
290
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தண்டவாளத்தில் போட்டோ ஷூட் எடுக்கும் போது ரயில் வந்ததால் புதுமண தம்பதி பாலத்தில் இருந்து கீழே விழுந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது உள்ள சமூக வலைதள மோகத்தால், பலரும் ஆபத்தான முயற்சிகளில் ஈடுபட்டு, அதில் விபத்துக்குள்ளாகி உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் கடந்த சனிக்கிழமை ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. அதன் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பாலியில் உள்ள கோரம் காட் ரயில் பாலத்தில் ஒரு தம்பதி போட்டோஷூட் எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த பாலத்தின் மீது பயணிகள் ரயில் வர, என்ன செய்வதென்று தெரியாத அவர்கள் கீழே உள்ள 90 அடி பள்ளத்தாக்கில் குதித்தனர். உடனே அந்த ரயிலும் நின்றுவிட்டது.

பலத்த காயமடைந்த அந்த தம்பதியினரை அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, கணவர் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், மனைவியும் அதிக காயங்களுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிலையில், இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறும்போது, அந்த தம்பதியினருக்கு ரயில் வருவதே கடைசி நேரத்தில் தான் தெரியவந்தது எனவும், அவர்கள் அந்த சமயத்தில் திடீரென குதித்ததாகவும் தெரிவித்தார்.

விளம்பரம்

A Couple Jumps From Rail Bridge Into 90-Feet Gorge As Train Arrives During Photo Shoot pic.twitter.com/G0KbnGhgZo

— Ravinder Devnani 🇮🇳 (@DevnaniRavinder) July 15, 2024

விளம்பரம்

மேலும் இந்த கோரம் காட் ரயில் பாலத்தில் புகைப்படங்கள் எடுக்கவும், ரீல்ஸ் எடுக்கவும் ஏராளமான மக்கள் வருவதால், அதிகம் விபத்துக்கள் நடப்பதாகவும், இந்த இடத்தில் பாதுகாப்புகள் பலப்படுத்த அங்கிருக்கும் அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.

Previous Post

Red alert for 3 states: மழை வரப் போகுது! இந்த மூன்று மாநிலங்களுக்கு ரெட் அலெர்ட்.. ஸ்கூலுக்கு லீவ்!-rain updates imd issues red alert for these three states schools shut

Next Post

சவுக்கு சங்கரை பார்த்தால் பயமா? தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சவுக்கு சங்கரை பார்த்தால் பயமா? தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி..!

சவுக்கு சங்கரை பார்த்தால் பயமா? தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In