Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவரது மனைவியுடன் பங்கேற்பு – News18 தமிழ்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 14, 2024
in அரசியல் செய்திகள்
0
குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவரது மனைவியுடன் பங்கேற்பு – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சென்டின் திருமணத்தையொட்டி நடைபெற்று வரும் சுப ஆசிர்வாத நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் குடும்பத்துடன் கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வதித்தார்.

அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சென்ட் ஆகியோரின் திருமண நிகழ்ச்சிகள் முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானியின் மிகவும் பிரமாண்டமான அண்டலியா இல்லத்தில் மாமேரு நிகழ்ச்சியுடன் கடந்த வாரத்தில் தொடங்கியது. நேற்று பிரமாண்டமான முறையில் திருமணம் நடைபெற்ற நிலையில், அடுத்தடுத்த நாட்களுக்கான விழாக்கள் நடைபெறுகின்றன.

விளம்பரம்

மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் அனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்டுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. முன்னதாக, அரங்கிற்கு வந்த அனந்த் அம்பானி பிரமாண்டமான இளஞ்சிவப்பு நிற ஆடையை அணிந்திருந்தார். அப்போது அவருக்கு பின்னால் அவரது நண்பர்கள் சிவப்பு நிறத்தில் ஜொலிக்கும் ஆடைகளை அணிந்து வந்தனர். அப்போது அவரை தந்தை முகேஷ் அம்பானி, சித்தப்பா அனில் அம்பானி ஆகியோர் வரவேற்றனர். அத்துடன், நீடா அம்பானி, ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோகா மேத்தா ஆகியோரும் புன்னகையுடன் வரவேற்று மகிழ்ந்தனர்.

விளம்பரம்

இந்த திருமண விழாவில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் திரைப்பட நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் என பல தரப்பினரும் பங்கேற்றனர்.

இதில், அனந்த் மற்றும் ராதிகாவின் உறுதியேற்பு வீடியோவுடன் மண்டபத்தில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க – உலகே வியந்த பிரமாண்டம்…! அனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் பிரம்மாண்ட திருமண விழா ஹைலைட்ஸ்

திருமணத்தை தொடர்ந்து சுப ஆசிர்வாத நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுகின்றன. இதில் முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

விளம்பரம்

இதையும் படிங்க – விருந்தினர்களை கவர்ந்த அனந்த் அம்பானியின் செல்லப்பிராணி… வீடியோ வைரல்!

முன்னதாக ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சென்ட் திருமணத்தில் ரியாலிட்டி டிவி நட்சத்திரம் கிம் கர்தாஷியன் மற்றும் அவரது சகோதரி க்ளோ, நைஜீரிய ராப்பர் ரெமா, முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் மற்றும் எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோ சிஇஓ அமின் நாசர் முதல் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தலைவர் ஜே லீ மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனமான ஜிஎஸ்கே வரை உலக வர்த்தக அதிபர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

.



.

Previous Post

மதுவிலக்கு எனும் மாயநாடகம்; கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி, ஸ்டாலின்; எல்லோரும் நடிகர்களே

Next Post

கைதாகிய அன்றே விடுதலையான நாதக துரைமுருகன்… டேமேஜ் ஆகிறதா தி.மு.க அரசின் இமேஜ்? | DMK Image Damaged on Duraimurugan’s Arrest ?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கைதாகிய அன்றே விடுதலையான நாதக துரைமுருகன்… டேமேஜ் ஆகிறதா தி.மு.க அரசின் இமேஜ்? | DMK Image Damaged on Duraimurugan’s Arrest ?

கைதாகிய அன்றே விடுதலையான நாதக துரைமுருகன்... டேமேஜ் ஆகிறதா தி.மு.க அரசின் இமேஜ்? | DMK Image Damaged on Duraimurugan's Arrest ?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In