மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் திமுக தலைமையி லான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஆர். சுதா 2,71,183 வாக்குகள் வித் தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் மக்களவை உறுப்பினராக பதவியேற்றதைத் தொடர்ந்து, தனது தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில்
திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினருடன் செம்பனார்கோவில் திமுக மத்திய ஒன்றியத்தில் உள்ள திருக்கடையூரில் தொடங்கி காழியப்பநல்லூர், மாணிக்கபங்கு, பிள்ளை பெருமாள் நல்லூர், டி.மணல்மேடு, கிளியூர், மேமாத்தூர், கீழ்மாத்தூர்,
உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர்க ளுக்கு நன்றி தெரிவித்தார். அப் போது அவருக்கு பொதுமக்கள் மற்றும் கட்சியினர் சால்வை அணித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த பயணத்தின்போது, எம்பி ஆர்.சுதாவுடன், பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் திறந்த வாகனத்தில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
திமுக தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பி.எம். ஸ்ரீதர், மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், ஒன்றியச் செயலாளர்கள் அமுர்த. விஜயகுமார் , மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் இரா.செந்தில் உள்ளிட்டோர் உடன் வந்தனர்.



வெற்றி பெற்ற மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா தனது தொகுதிக்குள் குறிப்பாக வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க முன்வர வேண்டும் தனது தொகுதிக்குள் 24 மணி நேரமும் இயங்கும் டாஸ்மாக் பார்களை மூடுவதோடு அதை நடத்தும் நபர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே தனது தொகுதி மக்களுக்கு செய்யும் முதல் நல்லது. செய்வாரா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு.