Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

வகுப்பறையில் மாணவி மீது விழுந்த மின்விசிறி..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 13, 2024
in Default
1
வகுப்பறையில் மாணவி மீது விழுந்த மின்விசிறி..!
68
SHARES
110
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மத்திய பிரதேச மாநிலம் சேஹோர் பகுதியில், பள்ளி வகுப்பறையில் பொருத்தப்பட்டிருந்த மின் விசிறி, எதிர்பாராதவிதமாகக் கழன்று, மாணவி மீது விழுந்ததில் அவர் படுகாயமடைந்தார்.

பலத்த காயத்துடன் மாணவி சிகிச்சை பெற்று வரும் நிலையில், மாணவியை ரத்த வெள்ளத்தில் பார்த்த சில மாணவிகள் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் இருப்பதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

அஷ்டா பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் இந்த சம்பவம் நேரிட்டுள்ளது. இந்த சம்பவம் முழுக்க பள்ளி வகுப்பறையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியிருக்கிறது. இது சமூக வலைத்தளங்களில் பரவி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்த விடியோவில், பள்ளி வகுப்பறையில் ஆசிரியை ஒருவர் பாடம் நடத்திக்கொண்டிருக்கிறார். அப்போது திடீரென மின்விசிறி கீழே விழுகிறது. ஆசிரியை அந்த இடத்துக்கு ஓடுகிறார். உடனடியாக உதவிக்கு மற்றொரு ஆசிரியரை அழைத்து அவர், மாணவியை வகுப்பறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லும் விடியோ வெளியாகியிருக்கிறது.

பள்ளியிலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பிறகு அவர் போபாலில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சக மாணவிக்கு காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சென்றதைப் பார்த்த மாணவ, மாணவிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார்கள்.

இந்த சம்பவம் நடந்தது எப்படி என்பது குறித்தும், எதிர்காலத்தில் இவ்வாறு நடக்காமல் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Previous Post

அயோத்தியை தொடர்ந்து பத்ரிநாத் இடைத்தேர்தலில் INDIA கூட்டணி வெற்றி..

Next Post

10-வது படித்துள்ளீர்களா? மத்திய அரசில் 8,326 காலி பணியிடங்கள் அறிவிப்பு..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
10-வது படித்துள்ளீர்களா? மத்திய அரசில் 8,326 காலி பணியிடங்கள் அறிவிப்பு..!

10-வது படித்துள்ளீர்களா? மத்திய அரசில் 8,326 காலி பணியிடங்கள் அறிவிப்பு..!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    இந்த சம்பவத்திற்கு அந்த மாணவியின் வகுப்பாசிரியர் மற்றும் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரே பொறுப்பு. ஏனென்றால் அந்த வகுப்பில் உள்ள பாதுகாப்பு குறைபாடிற்கு வகுப்பாசிரியரும் அந்தப் பள்ளியில் உள்ள குறைபாடிற்கு அதாவது பாதுகாப்பு குறைபாடிற்கு தலைமை ஆசிரியருமே பொறுப்பு. எனவே இந்த ஆசிரியர்கள் இருவர் மீதும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆனால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மாணவியின் பெற்றோர் நினைத்தால் ஒரு நல்ல பத்திரிகையாளரை தொடர்பு கொள்ள வேண்டும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In