Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அயோத்தியை தொடர்ந்து பத்ரிநாத் இடைத்தேர்தலில் INDIA கூட்டணி வெற்றி..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 13, 2024
in Default
1
அயோத்தியை தொடர்ந்து பத்ரிநாத் இடைத்தேர்தலில் INDIA கூட்டணி வெற்றி..
30
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மக்களவைத் தேர்தலில் அயோத்தி தொகுதியில் தோல்வியடைந்த நிலையில், பத்ரிநாத் பேரவைக்கு நடந்த இடைத்தேர்தலிலும் தோற்றிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி.

உத்தரகண்ட் மாநிலத்தின் ஆளும் பாஜக, அங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் தோல்வியைத் தழுவியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

பத்ரிநாத் சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. சனிக்கிழமை பிற்பகல் 2.50 மணி நிலவரப்படி, காங்கிரஸ் வேட்பாளர் லக்பத் சிங் புடோலா, 5224 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதாவது புடோலா 28,161 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ராஜேந்திர பண்டாரி 22,937 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

உத்தரகண்ட் மாநிலம் பத்ரிநாத் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ராஜேந்திர பண்டாரி, தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, ஆளும் பாஜகவில் இணைந்தாா். இதனால், இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில், பாஜக வேட்பாளராக களமிறக்கப்பட்ட ராஜேந்திர பண்டாரி பின்னடைவை சந்தித்துள்ளார்.

இதன் மூலம், பத்ரிநாத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரது வெற்றியை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

ஜூலை 10ஆம் தேதி நாடு முழுவதும் 13 சட்டப்பேரவைகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

ஹிமாச்சலில் டேஹ்ரா, நலகார், தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். பஞ்சாப் மாநிலம் மேற்கு ஜலந்தர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியும், மேற்கு வங்க மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற ராய்கஞ்ச், ரானாகாட் தக்ஷிண், பக்டா தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். மணிக்டலா தொகுதியில் திரிணமூல் வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.

உத்தரக்கண்ட் மாநிலம் பத்ரிநாத் மற்றும் மாங்களூர், தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றி இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

தமிழகத்தின் விக்கிரவாண்டி உள்பட 7 மாநிலங்களில் உள்ள 13 பேரவைத் தொகுதிகளில் புதன்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.

மேற்கு வங்கத்தில் ராய்கஞ்ச், ரனாகாட் தக்ஷிண், பக்டா, மாணிக்தலா, ஹிமாசல பிரதேசத்தில் தெஹ்ரா, ஹமீா்பூா், நலகாா், உத்தரகண்டில் பத்ரிநாத் மற்றும் மாங்ளூா், பஞ்சாபில் ஜலந்தா் மேற்கு, மத்திய பிரதேசத்தில் அமா்வாரா (தனி), பிகாரின் ரூபாலி ஆகிய தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

Previous Post

ராஜ்பவன் ஊழியருக்கு கும்மாங்குத்து : ஆளுநர் மகன் எஸ்கேப்..!

Next Post

வகுப்பறையில் மாணவி மீது விழுந்த மின்விசிறி..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வகுப்பறையில் மாணவி மீது விழுந்த மின்விசிறி..!

வகுப்பறையில் மாணவி மீது விழுந்த மின்விசிறி..!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    பொதுவாக இந்த தோல்விக்கு முக்கிய காரணம் புதிதாக மூன்று சட்டங்களை கொண்டு வந்ததே. இருக்கிற சட்டத்தையே பொதுமக்கள் இன்னும் தெரிந்து கொள்ளவில்லை அதற்குள் புதியதாக சட்டம் வந்தால் அதை வைத்து அவர்கள் என்ன செய்வார்கள். புதியதாக கொண்டு வந்த மூன்று சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டுகிறேன். இதுவே இன்றைய பொது மக்களின் எதிர்பார்ப்பு இதை நிறைவேற்றும் பட்சத்தில் எதிர்காலத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் வெற்றி பெற வாய்ப்பு உண்டு. இல்லையென்றால் தொடர் தோல்வியே கிடைக்கும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In