மக்களவை தேர்தலில் உத்தர பிரதேசத்திலுள்ள அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தோல்வியடைந்தார். இதைத் தொடர்ந்து அவர் மீதான விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில், ஸ்மிருதி இரானியை இழிவுபடுத்தக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையில் நிகழ்வது சகஜம். இந்த நிலையில், ஸ்மிருதி இரானி குறித்து அவதூறான கருத்துக்களை பயன்படுத்தக் கூடாது என்றும், அதேபோல எந்தவொரு அரசியல் தலைவர் மீதும் அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சிக்கக் கூடாது என அனைவரையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாக ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
