மதுரை மாவட்டம் திருப்பாலை எம் எம் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சர்வசக்தி விநாயகர் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் செவ்வாய்க்கிழமை காலை 10:30 மணி அளவில் யாகசாலையில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் ஓத கோலாகலமாக தொடங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து புதன்கிழமை காலை 9 மணி அளவில் யாகசாலையில் மங்கள வாத்தியங்கள் முழங்க புனித தீர்த்தங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு கோபுர கலசத்தை நோக்கி புறப்பாடானது அந்த வேளையில் கருட பகவான் வாகனத்தில் வட்டமிட மகா கும்பாபிஷேகம் ஆனது நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல்லாயிரகணக்கான பக்தகோடிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நிர்வாகக்குழுவு நிகழ்சி சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்திருந்தனர். காவல்துறையும் ஒத்துழைப்பு தந்து சிறப்பாக நிகழ்ச்சியை நடத்தித்தந்தனர்.


