தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
மேற்கு வங்கத்தில் ராய்கஞ்ச், ரணகாட் தக்சின் (எஸ்சி), பாக்தா (எஸ்சி), மணிக்தலா ஆகிய நான்கு சட்டப்பேரவை தொகுதிகள் இடைத்தேர்தலை சந்திக்கின்றன.
பிஹாரில் ரூபாலி, பஞ்சாபில் ஜலந்தர் மேற்கு,
இமாச்சல பிரதேசத்தில் டேஹ்ரா, ஹமிர்பூர், நலகார்க்,
உத்தராகண்டில் பத்ரிநாத், மங்களூரு,
மத்திய பிரதேசத்தில் அமர்வாரா, தமிழகத்தில் விக்கிரவாண்டி தொகுதிக்கும் இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது.
இந்த இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 13ஆம் தேதி நடைபெறுகிறது.

