Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கதுவா தாக்குதலுக்கு பதிலடி: மத்திய அரசு திட்டவட்டம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 10, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
கதுவா தாக்குதலுக்கு பதிலடி: மத்திய அரசு திட்டவட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


புதுதில்லி: ஜம்மு-காஷ்மீரின் கதுவா நகரில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் கதுவா நகரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலைக் கண்டித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “கதுவாவின் பத்னோட்டா பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் வீரமரணமடைந்த தகவல் அறிந்து மிகவும் துயரமடைந்தேன். அவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் அவர்களுக்குத் துணையாக இந்த தேசம் நிற்கிறது. ஜம்மு-காஷ்மீர் பிராந்தியத்தில் அமைதியையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு நமது ராணுவ வீரர்கள் உறுதி பூண்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புத் துறை செயலாளர் அரமனே கூறுகையில், “தாக்குதலில் உயிரிழந்த வீரர்கள் தேசத்துக்கு தன்னலமின்றி ஆற்றிய சேவை எப்போதும் நினைவில் கொள்ளப்படும். அவர்களின் தியாகத்துக்கு உரிய பதிலடி கொடுக்காமல் விட மாட்டோம். இத்தாக்குதலின் பின்னணியில் உள்ள தீய சக்திகளை இந்தியா தோற்கடிக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் இரங்கல்: இது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இன்னுயிரை ஈந்த ராணுவ வீரர்களுக்கு இரங்கலையும் அவர்களின் குடும்பத்தாருக்கு அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமான செயலாகும். இது கண்டிக்கத்தக்கது. இத்தாக்குதலுக்கு உரிய பதிலடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தீவிர தேடுதல் வேட்டை

கதுவாவில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளைப் பிடிப்பதற்காக தீவிர தேடுதல் வேட்டையில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், “இத்தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளைப் பிடிப்பதற்காக மச்சேடி, பத்னோட்டா, கிண்ட்லி, லோஹை மல்ஹார் பகுதிகளில் ராணுவம், போலீஸார், சிஆர்பிஎஃப் படையினர் ஆகியோர் கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தரைவழி தேடுதல் படைகளுக்கு உதவியாக ஹெலிகாப்டர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அடர்ந்த வனப் பகுதிகளிலும் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கதுவாவில் ராணுவ வீரர்கள் மீது 3 முதல் 4 பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக நம்பப்படுகிறது. பயங்கரவாதிகளில் பெரும்பாலானோர் வெளிநாட்டினர் என்று யூகிக்கப்படுகிறது.

தொடரும் தாக்குதல்: பயங்கரவாதிகள் இருப்பிடத்தை தேடி பாதுகாப்பு படையினர் சென்றபோது தோடா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதையடுத்து, பயங்கரவாதிகளை கண்டறியும் முயற்சியில் ஜம்மு-காஷ்மீர் காவல்துறைக்கு உதவுவதற்காக தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) சிறப்புப் பிரிவு அதிகாரிகளும் களமிறக்கப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பனாரா கிராமத்தில் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி கிராம பாதுகாப்பு வீரர் முகமது ஷெரீஃப் கொல்லப்படக் காரணமாக இருந்த அதே பயங்கரவாதிகளே கதுவா தாக்குதலிலும் ஈடுபட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.



.

Previous Post

சுட்டிக்காட்டிய ஜூ.வி; பள்ளி மாணவர்களின் பிரச்னைக்கு உடனடி தீர்வுக்கண்ட சேலம் மாவட்ட ஆட்சியர்! | Salem district collector provided bus facility for the Government school students

Next Post

Vikravandi By Election : பரபரப்புக்கு மத்தியில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Vikravandi By Election : பரபரப்புக்கு மத்தியில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

Vikravandi By Election : பரபரப்புக்கு மத்தியில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In