மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 3341 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3341 கன அடியாக அதிகரித்துள்ளது
இன்று(ஜூலை 9) காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 40. 22 அடியிலிருந்து 40.59 அடியாக உயர்ந்துள்ளது. அணயிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
