மத்திய கப்பல் போக்குவத்து துறை அமைச்சர் திரு.சாந்தனு தாகூர் அவர்கள் தன் அதிகாரப்பூர்வ லெட்டர்ஹெட்டில் எல்லை பாதுகாப்பு படையின் 85BN அதிகாரிகளுக்கு இந்திய-வங்காள எல்லையில் பங்களாதேஷ் நாட்டின் ஜியாருல் காஸி என்பவருக்கு “பாஸ்”களை வழங்கியுள்ளார் என்று MP மகுவா மொய்த்ரா கூறியுள்ளார்.
இந்த வருகையின் போது அவர் 3 கிலோ மாட்டிறைச்சியை இந்தியாவிற்குள் கொண்டுவர அனுமதிப்பதாக அதிகாரப்பூர்வமாக தனது அரசு லெட்டர்ஹெட்டில் அனுமதித்துள்ளார் என்று MP மகுவா மொய்த்ரா tweeter-இல் பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் எல்லை பாதுகாப்பு படையின் தலைமைக்கும் உள்துறை அமைச்சகத்தையும் டாக் செய்து பதிவிட்டுள்ளார்.
மாட்டிறைச்சியை பங்களாதேஷ் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு கொண்டுவர ஒரு பாஜக மத்திய அமைச்சர் அனுமதித்து எல்லை பாதுகாப்பு படைக்கு கடிதம் வழங்கியிருப்பது இந்திய மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பரவிவரும் இந்த கடிதம் சமூக ஆர்வலர்களுக்கிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.



மாட்டிறைச்சியை கொண்டு வருவதற்கு அனுமதி தருவது ஒன்றும் குற்றமல்ல. மாட்டிறைச்சி என்பது ஒன்றும் தடை செய்யப்பட்ட பொருளும் கிடையாது