கர்நாடகா சிக்பலாப்பூர் தொகுதியில் வென்ற BJP MP திரு.K. சுதாகர் அவர்கள் தன ஆதரவாளர்களுக்கு மது விநியோகம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
சமீபத்தில் நடந்த தேர்தலில் பாஜக எம்பி சிக்கபள்ளாபூர் தொகுதியில் வெற்றிபெற்றார். முன்னாள் கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சராகவும் இருந்த இவர், பெங்களூர் அருகிலுள்ள நெலமங்கலாவில் பொது மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் லாரி கணக்கில் மது விநியோகம் செய்துள்ளார் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
ஏறத்தாழ 650 பீர் பெட்டிகளும், 450 மதுபான பெட்டிகளும் விநியோகிக்கப்பது என்று கூறப்படுகிறது. பொலீசாரே இந்த விநியோகத்தை முன்னின்று நடத்தி தந்துள்ளதாக கூறப்படுகிறது. தனிநபர் பயனுக்காக மாநில காவல் துறையை பயன்படுத்தப்படுவது கேவலமாக உள்ளது என்று அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் விமர்சித்து வருகின்றனர்.

பணம் கொடுத்தால் காவல்துறையினர் எதையும் செய்வார்கள் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு