Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

நீதிபதி நக்கீரன் அறைகூவல்: விஷ சாராயத்தால் இத்தனை அப்பாவி மக்கள் இறந்திருக்கிறார்கள், அமைதி ஏன்? போய் போராடு..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 6, 2024
in Default
0
நீதிபதி நக்கீரன் அறைகூவல்: விஷ சாராயத்தால் இத்தனை அப்பாவி மக்கள் இறந்திருக்கிறார்கள், அமைதி ஏன்? போய் போராடு..!
7
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மதுவை விற்று அதன் மூலம் வரும் காசை வைத்து ஒரு அரசாங்க நடத்துவது என்பது கேவலமானது என்று திருமாவளவன் பார்லிமென்டில் பேசியுள்ளதாக மதுரை தனியார் பள்ளியில் நடைப்பெற்ற போதை விழிப்புணர்வு விழாவில் மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி நக்கீரன் பேச்சு

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயத்தால் அத்தனை அப்பாவி மக்கள் இறந்திருக்கிறார்கள். அதுக்கப்புறமும் அமைதியா இருக்கணுமா? …மனிதனாக இருந்தால் போராடு என்பார்கள் என மதுரை தனியார் பள்ளியில் நடைப்பெற்ற போதை விழிப்புணர்வு விழாவில் மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி நக்கீரன் பேச்சு

மதுரை கோச்சடையில் உள்ள குயின் மீரா இன்டர்நேஷனல் பள்ளியில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பாடல் வெளியீட்டு விழா நடந்தது.

பள்ளியின் தலைவர் சந்திரன், நிர்வாக இயக்குனர் அபிநாத் சந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பாடலாசிரியர் மதன் கார்க்கி போதைக்கு எதிரான விழிப்புணர்வு பாடல் எழுதி, ஜெரார்டு பெலிக்ஸ் இசையமைத்திருந்த இந்த பாடல் வெளியீட்டு விழாவில், சிறப்பு விருந்தினர்களாக மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. நக்கீரன், செல்லமுத்து தொண்டு நிறுவனத்தின் தலைவர் ராமசுப்பிரமணியன், கே.ஜி.எஸ். ஸ்கேன்ஸ் உரிமையாளர் ஸ்ரீனிவாசன், போலீஸ் சூப்பிரண்டுகள் சிவபிரசாத்( தேனி), அரவிந்த்( மதுரை), ஐகோர்ட்டு வக்கீல் சாமிதுரை ஆகியோர் கலந்து கொண்டு, விழிப்புணர்வு பாடலை வெளியிட்டனர்.

விழாவில், ஐகோர்ட்டு நீதிபதி ஏ.ஏ. நக்கீரன் பேசும்போது: சுடும் வரை நெருப்பு சுற்றும் வரை பூமி போராடும் வரை மனிதன். நீ மனிதன். இதை ஏன் சொல்கிறேன் என்றால் இது ஒரு பெரிய போராட்டம் இந்த போராட்டத்தை இந்த பள்ளி நிர்வாகம் கையில் எடுத்திருக்கிறது.

இந்த போதை பொருள் விழிப்புணர்வு விழாவிற்கு நீதித்துறை,காவல்துறை, வழக்கறிஞர் துறை, மருத்துவர் துறை என அழைத்துள்ளார்கள் பெரும் வழக்கறிஞர்கள் எல்லாம் தனது தொழிலில் தோல்வி அடைந்ததற்கு காரணம் போதைப்பழக்கம்.

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயத்தால் அத்தனை அப்பாவி மக்கள் இறந்திருக்கிறார்கள். அதுக்கப்புறமும் அமைதியா இருக்கணுமா? என்று பார்த்தால்… மனிதனாக இருந்தால் போராடு என்பார்கள் அந்தப் போராட்டத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். இது பெரிய நெட்வொர்க். இதை ஒழிக்க காவல்துறை இரவு பகலாக பாடுபடுகிறார்கள்.

போதை பொருட்கள் சம்பந்தமாக வழக்கில் என்னிடம் பெயில் வாங்குவது கஷ்டம் என்றார்.

மாணவர்கள் நீங்கள் எல்லாரும் ஒவ்வொருவரும் whatsapp உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்த போதைப்பொருள் ஒழிப்பு சம்பந்தமாக மெஸெஜ் பண்ணுங்க. நீங்க உங்க குடும்பத்தினர் நன்பர்கள் என ஒவ்வொருத்தரும் விழிப்புணர்வு மெஸேஜ் பண்ணங்க. பரவலாக பண்ணுங்க. மாவட்டம் முழுவதும் பரவனும். தமிழ்நாட்டிலேயே இந்தப் பள்ளி தான் இதை முன்னெடுத்து இருக்கிறது என நினைக்கிறேன்.

இதை ஒழிக்க காவல்துறை முன்னெடுக்கணும் நீதித்துறையும் சேர்ந்திருக்கணும் அதோட வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் முன்னெடுக்கனும்.

நாங்கள் எல்லாம் இது குறித்து உங்களிடம் சொல்ல வில்லை என்றால் வேறு யார் இதை சொல்வது.

இப்ப உள்ள திரைப்படத்தில் எல்லாம் குடிப்பது போன்ற சீன் இல்லாமல் படங்களே இல்லை. அதேபோல டிவியில் எல்லாம் குடிபழக்கம் புகை பழக்கம் உடலுக்கு கேடு என 20முறையாவது விளம்பரம் வந்து விடுகிறது‌. இது ஒரு சமுதாய சீரழிவு.

குஜராத் மாநிலத்தில் அமுல் கம்பெனி பாலை விற்றதன் மூலமாக வருமானத்தை ஈட்டினார்கள் ஆனால் இவர்கள் சாராயத்தை விற்று வருமானத்தை ஈட்டுகிறார்கள். எது வளர்ச்சி என்றால் பாலை உற்பத்தி செய்து விற்று வளர்ச்சியடைந்து தான்.

குடியை விற்று அதன் மூலம் வரும் காசை வைத்து ஒரு அரசாங்க நடத்துவது என்பது கேவலமானது என்று நான் சொல்லல திருமாவளவன் பார்லிமென்டில் பேசியுள்ளார் என்றார்.

விழாவின் இறுதியாக போதைப்பொருளுக்கு எதிராக உறுதிமொழி எடுக்கப்பட்டது.

Previous Post

திருத்துறைப்பூண்டி: தண்ணீர் வழங்க மறுக்கும் சேகல் ஊராட்சி தலைவர்; கடுங்கோபத்தில் மக்கள்..

Next Post

தேர்தல் களத்தில் அமைச்சர்கள், அன்புமணி, சீமான்… விக்கிரவாண்டி ரவுண்ட் அப்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தேர்தல் களத்தில் அமைச்சர்கள், அன்புமணி, சீமான்… விக்கிரவாண்டி ரவுண்ட் அப்!

தேர்தல் களத்தில் அமைச்சர்கள், அன்புமணி, சீமான்... விக்கிரவாண்டி ரவுண்ட் அப்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In