திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் சேகல் ஊராட்சி எட்டாவது வார்டு தண்ணீர் காக தவிக்கும் கிராம மக்கள் கண்டு கொள்ளாத சேகல் ஊராட்சி மன்ற தலைவர்.
சேகல் ஊராட்சியில் சுமார் 75 குடும்பங்கள் வசிக்கின்ற அதில் 120க்கும் மேலான மக்கள் இருக்கின்றனர். இந்த ஊராட்சியில் தண்ணீருக்காக அவதிப்படும் மக்கள் அருகில் உள்ள ஊராட்சிகளில் தண்ணீருக்காக படை எடுத்து செல்கின்றனர். குறிப்பாக பாமணி, மகராஜபுரம் ,கொறுக்கை ஆகிய இடங்களுக்கு இருசக்கர வாகனங்களில் சென்று தண்ணீர் கொண்டு வருகிறார்கள்.
மேலும் பள்ளிப் பயலும் குழந்தைகளும் முதியோர்களும் இப்பகுதியில் வசித்து வருகின்றனர். அதில் வேலைக்கு செல்லும் பெண்மணிகளும் உள்ளனர்கள். தண்ணீர் தட்டுப்பாடால் மன உளைச்சலில் இருக்கும் இல்லத்தரசிகள் தண்ணீர் கிடைக்காததால் மிகவும் கனிவாக ஊராட்சி மன்ற தலைவர் தலைமையிடமும் ஊராட்சி செயலர் அவர்களிடமும் பலமுறை புகார் அளித்தும் நேரில் சென்று கூறியுள்ளார்கள். காதில் போட்டுக் கொள்ளாத ஊராட்சி தலைவி மற்றும் செயலர் பழிவாங்கும் நோக்கத்தில் இருப்பதாக அப்பகுதி எட்டாவது வார்டு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கூறுகின்றனர்.
ஊராட்சியை பொருத்தவரையில் பலமுறை ஒரு சில பத்திரிகைகளில் செய்திகள் வந்த வண்ணமே உள்ளது அதை ஒருபோதும் மாவட்ட நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுப்பது இல்லை அப்பகுதி மக்களை குறைகள் கூட கேட்க நேரம் கிடையாது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

