ராஜபாளையம் அருகே ஆலங்குளத்தில் நடைபெற்ற மதிமுக செயற்குழு கூட்டத்தில் சாத்தூர் எம்எல்ஏ டாக்டர் ரகுராமன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே ஆலங்குளத்தில் மதிமுக மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சாத்தூர் எம்எல்ஏ டாக்டர். ரகுராமன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று சட்ட திருத்தங்களை திரும்ப பெற வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். கள்ளச்சாராயம் காய்ச்சும் சமூக விரோதிகளுக்கும், அவர்களுக்கு துணை போகிறவர்களுக்கும் ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி. அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தல் உள்ளிட்ட 10 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

