2003 ஆம் ஆண்டில் வடக்கு அயர்லாந்தில் மனித உரிமைகள் சட்டத்திற்கு இணங்குவதை உறுதி செய்யும் பணியில் இணைந்தார்.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, தொழிலாளர் கட்சியின் கார்டன் பிரவுன் பிரதமராக இருந்தபோது இங்கிலாந்து, வேல்ஸிற்கான பொது வழக்குகளின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
2008 மற்றும் 2013 க்கு இடையில், எம்.பி.க்கள் செலவினங்களை தவறாக பயன்படுத்தியதற்காகவும், பத்திரிகையாளர்கள் ஃபோன் ஹேக்கிங்கிற்காகவும், இங்கிலாந்து முழுவதும் அமைதியின்மையில் ஈடுபட்ட இளம் கலகக்காரர்கள் மீதும் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை கியெர் ஸ்டார்மர் மேற்பார்வையிட்டார்.
இரண்டாம் எலிசபெத் மகாராணியால் நைட் பட்டம் பெற்றுள்ளார். ஆனால் “சர்” என்ற பட்டத்தை அரிதாகவே பயன்படுத்துகிறார்.
2015 நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். வடக்கு லண்டனில் இடதுசாரி கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினார். அவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு, அவரது தாயார் பல ஆண்டுகளாக நடக்க முடியாத மூட்டுவழி நோயால் இறந்தார்.
2020 ஆம் ஆண்டில், தொழிலாளர் கட்சி 85 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான பொதுத் தேர்தல் தோல்வியை சந்தித்ததால், அக்கட்சியை வழிநடத்த கெய்ர் ஸ்டார்மர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கன்சர்வேடிவ் கட்சியின் ஆட்சியின்கீழ் பல ஆண்டுகளாக நிலவும் பொருளாதார சிக்கல் மற்றும் அரசியல் குழப்பத்தை கெய்ர் ஸ்டாமர்மரும், அக்கட்சியினரும் பயன்படுத்திக் கொண்டு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர்.
