இந்நிலையில் 104 மருத்துவ சேவைகள் நிகழ்ச்சி, நீட் தேர்வு எழுதிய 1,44,516 மாணவர்களுக்கு உதவும்படி, மே 18ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இதில் 54,374 மாணவர்களுக்கு இதுவரை ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதில் அதிக மன அழுத்தத்தில் உள்ள 177 மாணவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு தொடர்ந்து கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டங்களில் உள்ள மன நல ஆலோசகர்களும் மாணவ, மாணவிகளுக்கு வீடுகளுக்கே நேரடியாக சென்று ஆலோசனைகள் வழங்கிவருகிறார்கள்.

