7.துர்க்மெனிஸ்தான்ன் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறினார். அதில், “இந்த நிகழ்ச்சியில், உலகின் புகழ்பெற்ற 24 கவிஞர்களின் சிலைகளை துர்க்மெனிஸ்தான் அதிபர் திறந்து வைத்தார். இந்த சிலைகளில் ஒன்று குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் சிலை. இது குருதேவுக்கு கிடைத்த கவுரவம், இந்தியாவுக்கு கிடைத்த கவுரவம். ஜூன் மாதத்தில் இரண்டு கரீபியன் நாடுகளான சுரினாம், செயிண்ட் வின்சென்ட் மற்றும் க்ரனடைன்ஸ் ஆகியவை தங்களது இந்திய பாரம்பரியத்தை முழு உற்சாகத்துடன் கொண்டாடின. சூரினாமில் உள்ள இந்திய சமூகத்தினர் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதியை இந்திய வருகை தினம் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் தினமாக கொண்டாடுகிறார்கள். இந்தியுடன், போஜ்புரி மொழியும் அவ்விடம் பரவலாக பேசப்படுகிறது’’ என்றார்.