மலையாளத்தில் பிரபலமான நடிகராக இருப்பவர் சித்திக். 350க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்துள்ளார். மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் நடித்துள்ளார்.
சிறந்த நடிப்புக்காக மாநில அரசின் விருதுகளை பல முறை வென்றுள்ளார்.
நடிகாராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் சித்திக் சிறப்பான படங்களை தயாரித்துள்ளார்.
இவரது மூத்த மகன் 37 வயதான ராஹீன் சித்திக் காலமாகியுள்ளார். இவரது தம்பி ஷாஹீன் (35) மம்மூட்டியின் பதேமரி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஷாஹீன் துணைக் கதாபாத்திரங்களில் முக்கியமான சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சுவாச பிரச்னையால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த ராஹீன் சித்திக் நுரையீரல் செயலிழப்பினால் காலமாகியுள்ளார்.
மலையாள சினிமா பிரபலங்கள் சித்திக்கின் ரசிகர்கள் அவருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.
