Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அயோத்தி ராமர் கோயில் மேற்கூரை கசிகிறதா?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 24, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
அயோத்தி ராமர் கோயில் மேற்கூரை கசிகிறதா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அயோத்தி ராமர் கோயில் மேற்கூரை கசிவதாக அக்கோயிலின் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் இன்று (ஜூன் 24) தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசத்தில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், ராமர் கோயில் மேற்கூரையில் மழை நீர் தேங்குவதாகவும், வெளியேறுவதற்கு முறையான வடிவமைப்பு இல்லை எனவும் பூசார் குறிப்பிட்டார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயிலில் கடந்த ஜனவரி மாதம் பிராண பிரதிஷ்டை நடைபெற்றது. ஜனவரி மாதம் முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் ஸ்ரீ பால ராமரை தரிசனம் செய்து வருகின்றனர்.

இதனிடையே பக்தர்கள் தரிசனத்துக்காக திறந்து 5 மாதங்களே ஆன நிலையில், கோயிலின் மேற்கூரை கசிவதாக தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், இது ஆச்சரியமளிக்கிறது. பலதரப்பட்ட பொறியாளர்களால் கட்டப்பட்ட கோயிலின் பிராண பிரதிஷ்டை நிகழ்வு ஜனவரி 22ஆம் தேதி நடைபெற்றது. ஆனால், மேற்கூரையில் இருந்து நீர் கசிகிறது. இவ்வாறு நடக்கும் என யாரும் கற்பனை கூட செய்திருக்கமாட்டார்கள் எனக் கூறினார்.

மேலும், முதல் மழையில் ஸ்ரீ பாலராமர் சிலை உள்ள கருவறையின் மேற்புறத்தில் நீர் கசிந்தது. இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி, என்ன செய்ய வேண்டும் என்பதை கண்டறிய வேண்டும். இது மிகவும் முக்கியமானது. மேற்கூரையில் நீர் வெளியேறுவதற்கு இடமில்லை. தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், பக்தர்கள் தரிசனம் செய்வதற்கும் சிரமம் ஏற்படும் எனக் குறிப்பிட்டார்.



.

Previous Post

Rules: வினாத்தாள் கசிவுக்கு எதிரான சட்ட விதிகளை அறிவித்த மத்திய அரசு.. தரநிலைகளை உருவாக்க ஆட்சேர்ப்பு முகமைக்கு உத்தரவு!-centre notifies rules under anti paper leak law and mandates nra to prepare sop

Next Post

Tamil Nadu Assembly: ’பாமக புலி வாலை பிடித்துவிட்டது!’ வன்னியர் இடஒதுக்கீட்டு தொடர்பாக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பதில்!-minister ss sivashankars reply regarding reservation of seats for vanniyar community in the assembly

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Tamil Nadu Assembly: ’பாமக புலி வாலை பிடித்துவிட்டது!’ வன்னியர் இடஒதுக்கீட்டு தொடர்பாக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பதில்!-minister ss sivashankars reply regarding reservation of seats for vanniyar community in the assembly

Tamil Nadu Assembly: ’பாமக புலி வாலை பிடித்துவிட்டது!’ வன்னியர் இடஒதுக்கீட்டு தொடர்பாக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பதில்!-minister ss sivashankars reply regarding reservation of seats for vanniyar community in the assembly

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In