வட கொரியாவிலிருந்து கடந்த 9-ஆம் தேதியன்று இரவில் 300க்கும் அதிகமான பலூன்களில் குப்பைகள் அடங்கிய பைகளை தொங்கவிட்டு, அவற்றை தென் கொரிய எல்லைக்குள் பறக்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மீண்டும் அதேபாணியிலான நடவடிகைகளை வட கொரியா முன்னெடுத்திருப்பதாக தென் கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.
வட கொரிய எல்லையில் அதிக சத்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகள் மூலம் ஒலி மாசுபாட்டை தென் கொரியா ஏற்படுத்தியது. வட கொரியா மீதான உளவியல் ரீதியிலான தாக்குதலாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
இதனிடையே கடந்த வெள்ளியன்று தென் கொரிய செயற்பாட்டாளர்கள் வட கொரியாவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பலூன்களை எல்லை தாண்டி அந்நாட்டு எல்லைக்குள் பறக்கவிட்ட சம்பவத்துக்கு பதிலடியாக வட கொரியா பலூன் தாக்குதலை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
