Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

முதல் லோக்சபா கூட்டம்: அரசியல் சாசன புத்தகத்துடன் “இந்தியா” கூட்டணி எம்பிக்கள் கண்டனம்..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 24, 2024
in Default
1
முதல் லோக்சபா கூட்டம்: அரசியல் சாசன புத்தகத்துடன் “இந்தியா” கூட்டணி எம்பிக்கள் கண்டனம்..!
35
SHARES
56
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

டெல்லி: 18-வது லோக்சபா கூட்டத் தொடர் தொடங்கும் நிலையில் “இந்தியா” கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் “அரசியல் சாசன” புத்தகத்துடன் பேரணி நடத்த உள்ளனர். “இந்தியா” கூட்டணி எம்பிக்கள் ஒன்றிணைந்து லோக்சபாவுக்குள் நுழையவும் திட்டமிட்டுள்ளனர்.

18-வது லோக்சபாவின் முதல் கூட்டத் தொடர் இன்று முற்பகல் 11 மணிக்கு தொடங்குகிறது. முன்னதாக தற்காலிக சபாநாயகராக பர்த்ருஹரி மகதாப்புக்கு ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இதனையடுத்து சபை நடவடிக்கைகளை தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் நடத்த இருக்கிறார்.

lok sabha india bloc

லோக்சபாவில் இன்றும் நாளையும் புதிய எம்பிக்கள் பதவியேற்கின்றனர். முதல் நாளான இன்று மகாராஷ்டிராவின் எம்பிக்கள் உட்பட 280 பேர் பதவியேற்கின்றனர். நாளை தமிழ்நாடு எம்பிக்கள் 39 பேர் உள்ளிட்டோர் பதவியேற்க உள்ளனர்.

லோக்சபாவில் பிரதமர் மோடி முதலில் பதவியேற்பார். இதன் பின்னர் தற்காலிக துணை சபாநாயகர்களாக அறிவிக்கப்பட்ட டிஆர். பாலு(திமுக), ராதா மோகன் சிங்(பாஜக),பகன்சிங் குலஸ்தே(பாஜக) சுதிப் பந்தோபாத்யாய் (திரிணாமுல் காங்கிரஸ்) ஆகியோர் பதவியேற்க அழைக்கப்படுவர். ஆனால் தற்காலிக சபாநாயகர் நியமனத்தில் அதிருப்தி இருப்பதால் பிரதமருக்கு அடுத்ததாக “இந்தியா” கூட்டணியின் தற்காலிக சபாநாயகர்கள் பதவிப் பிரமாணம் எடுத்து கொள்வார்களா? புறக்கணிப்பார்களா? என்பது எதிர்பார்ப்பு.

இதனிடையே நாடாளுமன்ற வளாகத்தில் “இந்தியா” கூட்டணி எம்பிக்கள் இன்று பேரணி நடத்த உள்ளனர்.நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை இருந்த இடத்தில் இருந்து இந்தப் பேரணி நடத்தப்பட உள்ளது. இந்திய அரசியல் சாசனப் புத்தகத்தை கைகளில் ஏந்தி இந்தப் பேரணி நடத்தப்படும். அத்துடன் “இந்தியா” கூட்டணி எம்பிக்கள் ஒன்றாக லோக்சபாவுக்குள் நுழையவும் திட்டமிட்டுள்ளனர். இதனால் நாடாளுமன்ற வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது.

Previous Post

நீட் கேள்வித்தாள் லீக்கானது எப்படி? முக்கிய குற்றவாளி சிக்கியது எப்படி? கலக்கத்தில் பெரும்புள்ளிகள்

Next Post

கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை போட்டி-2024.! சென்னையில் கவிஞர்கள் குழாம் சங்கமம்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை போட்டி-2024.! சென்னையில் கவிஞர்கள் குழாம் சங்கமம்.

கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை போட்டி-2024.! சென்னையில் கவிஞர்கள் குழாம் சங்கமம்.

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    அட போங்கடா நீங்களும் உங்க கண்டனங்களும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In