பெண்கள் பாதுகாப்பு, முதியோர் நலன், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் நலன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலன் சார்ந்து பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
அவை குறித்துப் பார்க்கலாம்:-
* மாற்றுத்திறனாளி மாணவர்களின் ஆராய்ச்சி படிப்புக்கு ரூ.50 லட்சம் நிதியில் முதல்வரின் உதவித்தொகை திட்டம்.
* சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மூலம் இரவல் பெறுவோர்களுக்கு ரூ.2.8 கோடி மதிப்பில் மறுவாழ்வு இல்லங்கள்.
* அரசு கூர்நோக்கு, சிறப்பு மற்றும் பாதுகாப்பு இல்லங்களில் சிறார்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்பில் அடிப்படை பயிற்சி வழங்கப்படும்.
* சென்னை அரசு கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்படும் சிறார்கள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுக்க ரூ.40 லட்சம் மதிப்பில் `பாதை திட்டம்’.
* தனியாரால் நடத்தப்படும் முதியோர் இல்லங்கள் மற்றும் பணிபுரியும் மகளிர் விடுதிகளின் பதிவு மற்றும் உரிமம் பெறும் நடைமுறைகள் Simple Governance திட்டம் மூலம் எளிதாக்கப்படும்.
அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் பயிலரங்கங்கள்.
உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

வரவேற்கப்பட வேண்டிய அறிவிப்புகள் விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டுகிறேன்