நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக உயர் நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய மனு மீது பதிலளிக்க தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.
மேலும், நீட் முறைகேடு தொடர்பான வழக்குகளை உயர் நீதிமன்றங்கள் விசாரிக்க தடை விதித்தும், நீட் கலந்தாய்வுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது உச்ச நீதிமன்றம்.
உயர் நீதிமன்றங்களில் தொடரப்பட்டிருக்கும் நீட் முறைகேடு தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
