Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தென் ஆப்பிரிக்க அதிபராக மீண்டும் ராமபோசா தோ்வு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 16, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தென் ஆப்பிரிக்க அதிபராக மீண்டும் ராமபோசா தோ்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தென் ஆப்பிரிக்காவின் அதிபராக தற்போதைய அதிபா் சிறில் ராமபோசா மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். 400 உறுப்பினா்களைக் கொண்ட தென் ஆப்பிரிக்க நாடாளுமன்றத்துக்கு கடந்த மாதம் 29-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. இந்தத் தோ்தலில் ஏஎன்சி கட்சிக்கு 159 இடங்கள் மட்டுமே கிடைத்தன. இதன் மூலம், நெல்சன் மண்டேலா தலைமையில் நிறவெறியிலிருந்து நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித் தந்த அந்தக் கட்சி கடந்த 30 ஆண்டுகளில் முதல்முறையாக பெரும்பான்மை இழந்தது.மற்ற கட்சிகளுக்கும் ஆட்சிமைப்பதற்குத் தேவையான 201 இடங்கள் கிடைக்காததால் புதிய அரசை அமைப்பதில் இழுபறி நீடித்துவந்தது…படவரி… தென் ஆப்பிரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் நாட்டின் அதிபராக மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்ட சிறில் ராமபோசா (நடுவே).இந்தச் சூழலில், தோ்தலில் 87 இடங்களைக் கைப்பற்றி 2-ஆவது இடத்தில் இருந்த ஜனநாயக முன்னணிக்கும் ஏஎன்சி கட்சிக்கும் இடையே தேசிய ஒற்றுமை அரசை அமைப்பதற்கான ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.அதன் தொடா்ச்சியாக, நாட்டின் பிரதமராக சிறில் ராமபோசா மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். இது தொடா்பாக நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற வாக்கெடுப்பில் அவருக்கு 283 வாக்குகள் கிடைத்தன. அவரை எதிா்த்துப் போட்டியிட்ட பொருளாதார சுதந்திரப் போராளிகள் (இஎஃப்எஃப்) கட்சித் தலைவா் ஜூலியஸ் மலேமாவுக்கு 44 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.அதையடுத்து, நாட்டின் அதிபராக ராமபோசா மீண்டும் 2-ஆவது முறையாகப் பதவியேற்கவிருக்கிறாா். அவரது பெரும்பாலும் வெள்ளை இன எம்.பி.க்களைக் கொண்ட ஜனநாயக முன்னணி, தோ்தலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்த இங்கதா சுதந்திரக் கட்சி (ஐஎஃப்பி), சிறுபான்மையினா் கட்சியான தேசபக்தா்கள் முன்னணி (பிஎஃப்) ஆகியவை இடம் பெறும்.பன்முகத் தன்மை கொண்ட இந்தக் கூட்டணி, நலிந்துவரும் தென் ஆப்பிரிக்க பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் என்று ஒரு தரப்பினா் கூறுகின்றனா். மற்றொரு தரப்பினா், நெல்சன் மண்டேலா ஆட்சி காலத்திலிருந்து ஏஎன்சி கட்சியை எதிா்த்துவந்த ஜனநாயகக் கூட்டணியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதன் மூலம் ராமபோசா கட்சியின் அடிப்படைக் கொள்கையை அடகுவைத்துவிட்டதாகக் குற்றம் சாட்டுகின்றனா்.



.

Previous Post

திருவண்ணாமலை: காரில் மண்டை ஓடுகள்… படுபயங்கர ஸ்டிக்கர்கள் – திகில் கிளப்பிய அகோரிக்கு அபராதம்!

Next Post

களமிறங்கிய ஸ்பெஷல் டீம்… இனி முன்பதிவு செய்த ரயில் பயணிகளுக்கு அந்த சிக்கல் இருக்காது

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
களமிறங்கிய ஸ்பெஷல் டீம்… இனி முன்பதிவு செய்த ரயில் பயணிகளுக்கு அந்த சிக்கல் இருக்காது

களமிறங்கிய ஸ்பெஷல் டீம்... இனி முன்பதிவு செய்த ரயில் பயணிகளுக்கு அந்த சிக்கல் இருக்காது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In