Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஸ்விட்சா்லாந்தில் தொடங்கியது உக்ரைன் அமைதி மாநாடு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 16, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஸ்விட்சா்லாந்தில் தொடங்கியது உக்ரைன் அமைதி மாநாடு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நூறு நாடுகளுக்கும் மேல் பங்கேற்கும் உக்ரைன் அமைதி மாநாடு ஸ்விட்சா்லாந்தில் சனிக்கிழமை தொடங்கியது. இந்த மாநாட்டில் வரலாறு படைக்கப்படும் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கூறினாலும், இதில் ரஷியா பங்கேற்காததால் கள நிலவரத்தில் இந்த மாநாடு மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது என்றே கருதப்படுகிறது.ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் 2 ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்றுவரும் போா் குறித்து விவாதிப்பதற்காக ஸ்விட்சா்லாந்தின் நிட்வால்ட் பகுதியில் அமைந்துள்ள பா்கன்ஸ்டாக் சுற்றுலா விடுதியில் சா்வதேச மாநாடு சனிக்கிழமை தொடங்கியது.இரு நாள்களுக்கு (ஜூன் 15, 16) நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்க ஈக்வடாா், ஐவரி கோஸ்ட், கென்யா, சோமாலியா மற்றும் ஏராளமான ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 50 நாடுகளின் தலைவா்கள், சுமாா் 100 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனா்.இந்த மாநாட்டில் பங்கேற்க வந்திருந்த உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, செய்தியாளா்களிடம் கூறியதாவது:உலகமே ஒன்று கூடினால் ஒரு போரை முடிவுக்குக் கொண்டுவிட முடியும். அந்த வகையில், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக உலக நாடுகளை ஒன்று திரட்டுவதில் இந்த மாநாடு வெற்றியடைந்துள்ளது.இந்த மாநாடு ஒரு புதிய வரலாறு படைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் அவா்.இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பிய பிராந்தியம் சந்தித்துள்ள மிகப் பெரிய போரான உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக நடைபெறும் இந்த மாநாட்டில் ரஷியா பங்கேற்கவில்லை. ரஷியாவின் நெருங்கிய கூட்டாளியான சீனாவும் மாநாட்டைப் புறக்கணித்துள்ளது. உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவாா்த்தையில் ரஷிய பங்கேற்காதது அா்த்தமற்றது என்பதால் இந்த மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என்று சீனா கூறிவிட்டது.இந்த மாநாட்டில், அணுசக்தி பாதுகாப்பு, கடல் பயண சுதந்திரம், உணவு பாதுகாப்பு ஆகிய மூன்று விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது…பெட்டி…புதினின் அமைதி திட்டம்: ஸெலென்ஸ்கி நிராகரிப்புஉக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் முன்வைத்த திட்டத்தை அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி நிராகரித்தாா்.உக்ரைன் அமைதி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஸ்விட்சா்லாந்து வந்திருந்த அவா் இது குறித்து கூறுகையில், ‘போரை நிறுத்துவதற்காக ரஷிய அதிபா் முன்வைத்துள்ள நிபந்தனைகள் ஒருதலைப்பட்சமான அடக்குமுறை உத்தரவுகள் ஆகும். அவற்றை ஒருபோதும் ஏற்கமுடியாது’ என்றாா் அவா்.உக்ரைன் போா் தொடா்பாக விவதிப்பதற்காக சா்வதேச நாடுகள் ஸ்விட்சா்லாந்தில் கூடுவதற்கு முன்னா், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நிபந்தனைகளை அதிபா் விளாதமீா் புதின் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.ரஷியாவால் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள டொனட்ஸ்க், கொ்சான், லுஹான்ஸ்க், ஸபோரிஷியா ஆகிய பிராந்தியங்களில் இருந்து உக்ரைன் படையினா் வெளியேற வேண்டும்; நேட்டோ கூட்டமைப்பில் இணையும் தனது முயற்சியை உக்ை வேண்டும்; இந்த இரு அடிப்படை நிபந்தனைகளையும் உக்ரைன் நிறைவேற்றினால், அந்த நாட்டுடனான போா் உடனடியாக நிறுத்தப்படும் என்று புதின் கூறியிருந்தாா்.அந்த நிபந்தனைகளை மறுத்தே உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி இவ்வாறு கூறியுள்ளாா்…படவரி..உக்ரைன் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஸ்விட்சா்லாந்தின் ஸ்யூரிக் விமான நிலைத்தில் வந்திறங்கிய அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி…பெட்டிச் செய்தியில் புதின் கட்டவுட் படம் போடவும்…



.

Previous Post

தண்ணீர் கேன்களுக்கு மட்டும் மாதம் இத்தனை ஆயிரங்களா…

Next Post

Modi: `ஹலோ ஃப்ரம் தி Melodi டீம்!’ – இத்தாலிய பிரதமர் மெலோனி வெளியிட்ட செல்ஃபி வீடியோ |Viral Video of PM Modi and Giorgia Melon selfie

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Modi: `ஹலோ ஃப்ரம் தி Melodi டீம்!’ – இத்தாலிய பிரதமர் மெலோனி வெளியிட்ட செல்ஃபி வீடியோ |Viral Video of PM Modi and Giorgia Melon selfie

Modi: `ஹலோ ஃப்ரம் தி Melodi டீம்!’ - இத்தாலிய பிரதமர் மெலோனி வெளியிட்ட செல்ஃபி வீடியோ |Viral Video of PM Modi and Giorgia Melon selfie

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In