Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஜூன் 17-ல் சிஐடி விசாரணைக்கு ஆஜராகிறேன்: எடியூரப்பா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 15, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஜூன் 17-ல் சிஐடி விசாரணைக்கு ஆஜராகிறேன்: எடியூரப்பா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


போக்சோ வழக்கில் ஜூன் 17-ம் தேதி சிஐடி விசாரணைக்கு ஆஜராகவிருப்பதாக கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், முன் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிக்காக தில்லி சென்றிருந்தேன். ஜூன் 17-ம் தேதி விசாரணைக்கு ஆஜராவதாக எழுத்துப்பூர்வமாக முன்கூட்டியே தெரிவித்திருந்தேன். சிஐடி கைது செய்ய தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நான் திங்கட்கிழமை விசாரணைக்கு ஆஜராகிறேன். தேவையில்லாமல் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றனர். நான் யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை, அனைவருக்கும் தெரியும்.

சதியில் ஈடுபடுவோருக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். பெங்களூரு, சதாசிவ நகா் காவல் நிலையத்தில் முன்னாள் முதல்வா் எடியூரப்பா மீது பெண் ஒருவா் பாலியல் புகாா் அளித்திருந்தாா். அதில், முன்னாள் முதல்வா் எடியூரப்பாவை பெங்களூரு, டாலா்ஸ் காலனி இல்லத்தில் பிப். 2 ஆம் தேதி சந்தித்தபோது தனது 17 வயது மகளை அவா் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக குற்றம்சாட்டியிருந்தாா். அதன்பேரில் எடியூரப்பா மீது போக்சோ சட்டப் பிரிவு 8, இந்திய தண்டனை சட்டப் பிரிவு 354 ஏ இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தற்போது இந்த வழக்கை குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) விசாரித்து வருகிறது. எடியூரப்பாவுக்கு எதிராக புகாா் அளித்த பெண் கடந்த மாதம் கல்லீரல் புற்றுநோயால் உயிரிழந்தாா். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரா், எடியூரப்பாவை கைது செய்து விசாரணை நடத்த உத்தரவிடுமாறு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தாா். இதற்கிடையே இந்த வழக்கு தொடா்பாக ஜூன் 12 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு முன்னாள் முதல்வா் எடியூரப்பாவுக்கு சிஐடி நோட்டீஸ் அனுப்பியது.

ஆனால், எடியூரப்பா, தான் தில்லியில் இருப்பதால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என்றும், பெங்களூரு திரும்பியதும் ஜூன் 17 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராவதாகவும் சிஐடிக்கு கடிதம் அனுப்பினாா். இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகாத எடியூரப்பாவைக் கைது செய்ய வாரன்ட் பிறப்பிக்குமாறு பெங்களூரு, முதலாம் விரைவு நீதிமன்றத்தை சிஐடி வியாழக்கிழமை அணுகியது. இதை ஏற்ற நீதிமன்றம், எடியூரப்பாவை கைது செய்வதற்கு ஜாமீனில் வெளியே வரமுடியாத வியாழக்கிழமை வாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.

இதனிடையே இந்த வழக்கில் எடியூரப்பா எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடிவாரன்ட்டுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை விதித்துள்ளது. அதில், ஜூன் 17ம் தேதி வரை எடியூரப்பாவை கைது செய்து தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் எடியூரப்பாவின் கோரிக்கையை ஏற்று ஜூன் 17ஆம் தேதி சிஐடி(குற்றப் புலனாய்வுப் பிரிவு)

போலீஸார் முன்பு ஆஜராக நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



.

Previous Post

ADMK Boycotts Vikravandi By-Election: ’துணி துவைக்க கூட திமுக ரெடி!’ தேர்தல் புறக்கணிப்பு குறித்து ஜெயக்குமார் பேட்டி!-aiadmk ex minister jayakumar interviewed about vikravandi by election boycott

Next Post

ஜூன் மாசத்தில நீங்க பார்க்க வேண்டிய சூப்பரான சுற்றுலாத் தலங்கள் இவை தாங்க – மிஸ் பண்ணிடாதீங்க! | Monsoon holiday destinations to visit in south india – places to visit in June month in south india

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஜூன் மாசத்தில நீங்க பார்க்க வேண்டிய சூப்பரான சுற்றுலாத் தலங்கள் இவை தாங்க – மிஸ் பண்ணிடாதீங்க! | Monsoon holiday destinations to visit in south india – places to visit in June month in south india

ஜூன் மாசத்தில நீங்க பார்க்க வேண்டிய சூப்பரான சுற்றுலாத் தலங்கள் இவை தாங்க – மிஸ் பண்ணிடாதீங்க! | Monsoon holiday destinations to visit in south india – places to visit in June month in south india

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In