Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

NEET முறைகேட்டிலிருந்து இருந்து தப்பிக்க மத்திய அரசு முயற்சி செய்வது அவர்களின் திறமையின்மையை காட்டுகிறது :விளாசும் மு.க.ஸ்டாலின்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 13, 2024 - Updated on June 14, 2024
in அரசியல் செய்திகள்
0
NEET முறைகேட்டிலிருந்து இருந்து தப்பிக்க மத்திய அரசு முயற்சி செய்வது அவர்களின் திறமையின்மையை காட்டுகிறது :விளாசும் மு.க.ஸ்டாலின்!
3
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

NEET முறைகேட்டிலிருந்து இருந்து தப்பிக்க ஒன்றிய அரசு முயற்சி செய்வது அவர்களின் திறமையின்மையின் மற்றொரு ஒப்புதலாகும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடி உள்ளார்.

ஒரே தேர்வு மையத்தில் 6 பேர் முதலிடம்

கடந்த மே 5ஆம் தேதி அன்று 571 நகரங்களில் 4,750 மையங்களில் நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் ஹரியானாவில் ஒரே தேர்வு மையத்தை சேர்ந்த 6 பேர் உட்பட 67 பேர் முதல் தரவரிசையில் இடம் பெற்று உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது.

தேசிய தேர்வு முகமை விளக்கம்

நீட் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால், தேசிய தேர்வு முகமை, இதில் எந்த முறைகேடும் இல்லை என்றும், NCERT பாடப்புத்தகங்களில் செய்யப்பட்ட மாற்றங்களும், தேர்வு மையங்களில் நேரத்தை இழப்பதற்கான கருணை மதிப்பெண்களும்தான் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதற்குக் காரணம் என்று விளக்கம் அளித்து இருந்தது.

1563 பேரின் கருணை மதிப்பெண்கள் ரத்து

இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு தேர்வில் கருணை மதிப்பெண்கள் பெற்ற 1563 பேரின் மதிப்பெண் அட்டைகள் ரத்து செய்யப்படும் என்றும் தேர்வர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை இன்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.

நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்சில் இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு வந்தது.அப்போது தேசிய தேர்வு முகமை தரப்பு, “1563 பேரின் கருணை மதிப்பெண்களை ரத்து செய்வதாகவும், ஜூன் 23-ம் தேதி தேர்வு நடத்தப்பட்டு, ஜூன் 30-ம் தேதிக்கு முன் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அதில் தெரிவித்துள்ளது.” மேலும் இந்தாண்டுக்கான மருத்துவ கவுன்சிலிங்கிற்கு தடை விதிக்க முடியாது என்றும் தேசிய தேர்வுகள் முகமை கூறியது.

நீட் விவகாரம் தொடர்பாக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

இது தொடர்பாக தனது ‘எக்ஸ்’ சமூகவலைத்தளத்தில் கருத்துப்பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கருணை மதிப்பெண்களை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதன் மூலம் சமீபத்திய NEET முறைகேட்டிலிருந்து இருந்து தப்பிக்க ஒன்றிய அரசு முயற்சி செய்வது அவர்களின் திறமையின்மையின் மற்றொரு ஒப்புதலாகும்.

மாநிலங்களின் உரிமையைப் பறித்த பிறகு, முறைகேடுகளின் மையமாக விளங்கும் பிரச்சினைகள் மற்றும் ஒழுங்கற்ற முறையில் தேர்வுகளை நடத்துதல் போன்ற முக்கியப் பிரச்சனைகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்ப அனுமதிக்கக் கூடாது.

ஒன்றிய அரசின் திறமையின்மையையும், இலட்சக்கணக்கான மாணவர்களின் வேதனையைப் பற்றிய அவர்களின் அக்கறையின்மையையும் கண்டிக்கும் அதே வேளையில், மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வு முறையைத் தீர்மானிப்பதில் மாநில அரசுகளின் பங்கை மீட்டெடுப்பதுதான் இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.” என கூறி உள்ளார்.

கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேட்டி

நீட் தேர்வு விவகாரம் குறித்து எழுப்பப்படும் சந்தேகங்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், இரண்டாவது முறையாக மத்திய கல்வி அமைச்சராக தனது அலுவலகத்தில் தர்மேந்திர பிரதான் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வில் 24 லட்சம் மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

“மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் நீதி வழங்குவதில் இந்திய அரசும், தேசிய ஜனநாயக கூட்டணியும் உறுதிபூண்டுள்ளது. 24 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ள இந்த தேர்வில் வினாத்தாள் கசிவு ஏதும் நடக்கவில்லை. இதுவரை இதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவித்தார்.

.

Previous Post

செந்தில் பாலாஜிக்கு நாளையோடு ஒராண்டு! முன்னேற்றக் கழகத்துக்கு முப்பெரும் விழா ஒரு கேடா! விளாசும் அண்ணாமலை!

Next Post

முக்கிய துறைகளின் IAS அதிகாரிகளை இடமாற்றம் செய்த தமிழ்நாடு அரசு! ஏன் தெரியுமா? இதோ முழு விவரம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
முக்கிய துறைகளின் IAS அதிகாரிகளை இடமாற்றம் செய்த தமிழ்நாடு அரசு! ஏன் தெரியுமா? இதோ முழு விவரம்!

முக்கிய துறைகளின் IAS அதிகாரிகளை இடமாற்றம் செய்த தமிழ்நாடு அரசு! ஏன் தெரியுமா? இதோ முழு விவரம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In