எலோன் மஸ்க் தன்னோட நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ்-இல் பணிபுரியும் 2 ஊழியர்களுடன் உடலுறவு கொண்டதாகவும், தனது நிறுவனத்தில் உள்ள ஒரு பெண்ணிடம் தனது குழந்தைகளைப் பெற்றுத்தரும்படி கேட்டதாகவும் கூறப்படுகிறது. மஸ்க்-ன் சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாடு ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லாவின் சில நிர்வாகிகள் மற்றும் குழு உறுப்பினர்களிடையே கவலையை எழுப்பிய அதே வேளையில், எலோன் மஸ்க் தனது நிறுவனங்களில் இதுபோன்ற ஒரு தவறான கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளார், இது பெண் ஊழியர்களை சங்கடப்படுத்துகிறது என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.
முன்னதாக, எலோன் மஸ்க் எல்.எஸ்.டி., கோகோயின், எக்ஸ்டசி, காளான்கள் மற்றும் கெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்களை சில சமயங்களில் சில குழு உறுப்பினர்களுடன் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
டெஸ்லாவில் பணிபுரியும் பெண் ஊழியர்களை மேற்கோள் காட்டி, இந்த பெண்கள் எலோன் மஸ்க்-உடன் உடலுறவு கொண்டதாக அறிக்கை கூறியது. 2016 ஆம் ஆண்டு எலோன் மஸ்க் தன்னை பாலியல் செயல்களால் திருப்தி படுத்திய பணியாளர்களுக்கு குதிரையை வாங்கி கொடுத்ததாக ஸ்பேஸ்எக்ஸ் விமானப் பணிப்பெண் ஒருவர் குற்றம் சாட்டினார்.
2013 ஆம் ஆண்டில் SpaceX இலிருந்து ராஜினாமா செய்த மற்றொரு பெண், எலோன் மஸ்க் தனது குழந்தைகளைப் பெற்றுத்தரும்படி கேட்டதாக குற்றம் சாட்டினார். எலோன் மஸ்க்குடன் ஒரு மாத காலம் உடலுறவு வைத்திருந்ததாக அந்த பெண் நேரடியாகப் புகாரளித்தார். இந்த உறவு மோசமாக முடிந்ததும் நிறுவனத்தை விட்டு வெளியேறி, இந்த விஷயம் பற்றி இனி வெளியே சொல்லமாட்டேன் என்று கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டு வெளியேறினார்.


😈😈😈😈😈😈👹👹👹👹👹👹👹👹👹👹