Monday, September 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ராணுவ வீரர் வீடியோ பொய்யா? வெளியான பரபரப்பு தகவல்கள்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 13, 2023
in அரசியல் செய்திகள்
0
ராணுவ வீரர் வீடியோ பொய்யா? வெளியான பரபரப்பு தகவல்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

Thiruvannamalai oi-Velmurugan P
Updated: Tuesday, June 13, 2023, 19:24 [IST]
திருவண்ணாமலை: திருவண்ணாமலை ராணுவ வீரர் தனது மனைவியை அரைநிர்வாணமாக்கி சிலர் தாக்கிவிட்டதாக வீடியோ வெளியிட்ட நிலையில், அவர் நண்பரிடம் பேசியதாக ஒரு ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை எற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கடையை காலி செய்ய சொல்லி தாக்கிவிட்டதாக மண்டியிட்டு வேண்டுகோள் விடுத்தார் ராணுவ வீரர் பிரபாகரன் தனது நண்பர் செல்வத்துடன் பேசியதாக ஒரு ஆடியோ வெளியாகி உள்ளது. அந்த ஆடியோவில் பிரபாகரன் கூறுகையில், ” எந்த அளவிற்கு இறங்கி வேலை செஞ்சுருக்கேன் அப்படீன்றது.. இன்னைக்கு இல்லாட்டி நாளைக்கு தெரியவரும் பாரு.. எல்லாமே முடிஞ்சாச்சு, இங்க பாரு தமிழ்நாடு புல்லா ஸ்டிரைக் ஆகப்போகுது.. ஜஸ்ட் மதியத்திறகு மேல் ஸ்டார்ட் ஆகிடும். ஜஸ்ட் இப்படித்தான் நடந்தது அப்படின்னு ஒன்னுக்கு ரெண்டா சொல்லுங்க.. கிட்டத்தட்ட 6 கோடி பேருக்கு மேல பார்த்திருக்காங்க.. யூடியூப், பேஸ்புக், ட்விட்டர், அரசியல்வாதிகள், நாம் தமிழர் கட்சி, பாஜக அது இதுன்னு சொல்லி எல்லாருக்கும் பரப்பிட்டேன். மறுபடியும் வந்து ஆள் சப்போர்ட் வேணும். அங்கு ஸ்டிரைக் பண்ணும் போது, 10ல் இருந்து 20 பேராவது வேணும்.. அதுக்கான ஆளுங்க வந்து ரெடியாக இருக்கனும்,, எல்லாம் நம்ப பசங்களாக இருக்கணும். பேசும் போது, இதுமாதிரி அரை நிர்வாணம் பண்ணி அடிச்சாங்க அப்படின்னு சொல்லுங்க என்று ராணுவ வீரர் பிரபாகரன் கூறுவதாக ஆடியோ இருக்கிறது. அப்போது குறுக்கிட்ட அவரது நண்பர் செல்வம், அதுக்கு ஜீவாவும் உதயாவும் சப்போர்ட்டுக்கு வேணும்ல.. என்று கேட்பதாக உள்ளது. அதற்கு ராணுவ வீரர் செல்வம் வருவாங்க.. அதுக்கான ஏற்பாடு பண்ணு. கொஞ்சம் கிட்டவே இருக்க பாரு.. தலைமறைவாக.. என் தங்கச்சியை அடிக்கும் போது சும்மா இருக்க சொல்றீயா, ஆத்திரத்தில் பண்ணுனேன் என்று சொல்லு.. உங்களுக்கு இந்த பிரச்சனைய பற்றி தெரியலையே.. எனக்கு சிஎம்செல்லுல இருந்து பேசுனாங்க.. எத்தனை அமைச்சர்கள் பேசுனாங்க தெரியுமா, எத்தனை அரசியல்வாதிகள் பேசுனாங்க தெரியுமா.இன்னைக்கு நைட்டுக்குள்ள மொத்த பேரையும் தூக்குறோம் கவலையே படாத என்று சொன்னார்கள்” என்று ராணுவ வீரர் பிரபாகரன் பேசுவது போன்று ஆடியோ காணப்படுகிறது. முன்னதாக ராணுவ வீரர் பிரபாகரன் வெளியிட்ட ஆடியோவிற்கு விளக்கம் அளித்து திருவண்ணாமலை எஸ்பி கார்த்திகேயன் விளக்கம் அளித்தார். அந்த பதிவில் “சமூக வலைதளங்களில் பிரபாகரன் என்ற இராணுவ வீரர் திருவண்ணாமலை மாவட்டம், படவேடு கிராமத்தில் கீர்த்தி என்ற தனது மனைவியை கடை காலி செய்வதில் உள்ள பிரச்சனை காரணமாக சிலர் அடித்து மானபங்கம் செய்ததாக பேசும் வீடியோ குறித்து விசாரணை செய்யப்பட்டது. ராணுவ வீரர் மச்சான்தான் கத்தியால் வெட்டினார்.. மனைவிக்கு எதுவுமே ஆகல! திருவண்ணாமலை போலீஸ் விளக்கம் அதில், திருவண்ணாமலை மாவட்டம், படவேடு கிராமம் ரேணுகாம்பாள் கோவில் அருகே ரேணுகாம்பாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் குன்னத்துர் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவர் கட்டிடம் கட்டி படவேடு கிராமத்தைச் சார்ந்த செல்வமூர்த்தி என்பவருக்கு சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.9.50/-லட்சம் பெற்றுக்கொண்டு மாத வாடகையாக ரூ.3000/-க்கு வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில், கடந்த ஆண்டு மேற்கண்ட குமார் இறந்துவிடவே அவரது மகனான ராமு என்பவர் கடையை தங்களிடம் திரும்ப ஒப்படைக்கக்கோரி மேற்படி செல்வமூர்த்தியிடம் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி செல்வமூர்த்திக்கு ரூ.9.50/- லட்சம் ராமு கொடுத்து விடுவது என்றும், அதைப் பெற்றுக்கொண்டு 10.02.2023-ந் தேதியன்று செல்வமூர்த்தி கடையை காலி செய்வதென்றும் இருவருக்கும் எழுத்து மூலமாக உடன்பாடு எட்டப்பட்டிருக்கிறது. அதன்பின்னர், செல்வமூர்த்தி ஒப்பந்தப்படி பணத்தையும் பெற்றுக் கொள்ளாமலும், கடையையும் காலி செய்யாமலும் இருந்து வந்துள்ளார். ராமு பலமுறை முயற்சித்தும் பலனளிக்காமல் போகவே நேற்று (10.06.2023) காலை சுமார் 10.00 மணிக்கு ராமுவும் அவரது குடும்பத்தினரும் மேற்படி கடையில் சென்று செல்வமூர்த்தியின் மகன்கள் ஜீவா மற்றும் உதயா ஆகியோரிடம் பணத்தை கொடுத்து கடையை காலி செய்யக் கூறியபோது செல்வமூர்த்தியின் மகன் ஜீவா என்பவர் கத்தியால் ராமுவின் தலையில் தாக்கியுள்ளார். அப்போது ராணுவ வீரரின் மனைவியுமான மேற்படி செல்வமூர்த்தியின் மகளுமான கீர்த்தி மற்றும் அவரது தாயாரும் இருந்துள்ளனர். ராமுவிற்கு ஏற்பட்ட இந்த காயத்தை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் ராமுவிற்கு ஆதரவாக ஓடிவந்து ஒப்பந்தப்படி கடையையும் காலி செய்ய மறுத்துள்ளீர்கள், கடையின் உரிமையாளரையும் தாக்குகிறீர்கள் என்று ஆவேசப்பட்டு கடையிலிருந்த பொருட்களை எடுத்து வெளியே போட்டுள்ளார்கள். மேலும், பொதுமக்கள் ஆவேசப்பட்டு பொருட்களை எடுத்து வீசியுள்ளார்களே தவிர கீர்த்தியையோ அவரது தாயாரையோ யாரும் தாக்கி மானபங்கம் செய்யவில்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவருகிறது. மேலும் இந்த விஷயம் முற்றிலும் மிகைப்படுத்தி கூறியுள்ள தகவல் என தெரியவருகிறது. இருப்பினும், இருதரப்பிலும் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் சந்தவாசல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. இதன் உண்மை தன்மையின் அடிப்படையில் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று விளக்கம் அளித்திருந்தார்.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications
You have already subscribed English summary
While the Thiruvannamalai soldier posted a video saying that some people had attacked his wife, an audio of him speaking to a friend has created a stir. திருவண்ணாமலை ராணுவ வீரர் தனது மனைவியை சிலர் தாக்கிவிட்டதாக வீடியோ வெளியிட்ட நிலையில், அவர் நண்பரிடம் பேசியதாக ஒரு ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை எற்படுத்தி உள்ளது,

.

Previous Post

"தலைமைச் செயலகத்திலும் ரெய்டு நடத்தி, மிரட்ட விரும்புகிறார்களா?"- முதல்வர் ஸ்டாலின் கொதிப்பு

Next Post

“எந்த மாநிலத்திலும் நடக்காத அவல நிலை இது” – தலைமைச் செயலக ‘ரெய்டு’ காரணம் குறித்து அண்ணாமலை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“எந்த மாநிலத்திலும் நடக்காத அவல நிலை இது” - தலைமைச் செயலக ‘ரெய்டு’ காரணம் குறித்து அண்ணாமலை

“எந்த மாநிலத்திலும் நடக்காத அவல நிலை இது” - தலைமைச் செயலக ‘ரெய்டு’ காரணம் குறித்து அண்ணாமலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In