Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அண்ணாமலையும் வேண்டும், நீயும் வேண்டும்.. வசைபாடிய அமித்ஷா, இசைந்த தமிழிசை..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 12, 2024
in Default
1
அண்ணாமலையும் வேண்டும், நீயும் வேண்டும்.. வசைபாடிய அமித்ஷா, இசைந்த தமிழிசை..
133
SHARES
214
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பதவியேற்ற நிகழ்வில் அமித் ஷா, தமிழிசை சவுந்திர ராஜன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது, முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய நாயுடுவுடன் அமித்ஷா பேசிக்கொண்டிருந்தபோது தமிழிசை சவுந்திர ராஜன் மேடைக்கு வந்து அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தார். தமிழிசைக்கு முதலில்  வணக்கம் தெரிவித்து அமைதியாக திரும்பிய அமித் ஷா,  உடனே அவரை அழைத்து கோபமாக கண்டித்தார். அத்துடன் விரல் நீட்டி, சிவந்த கண்களுடன் பொதுவெளியில் பேசக்கூடாது என ஆங்கிலத்தில் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தார். தமிழிசை சவுந்திர ராஜனும் அந்த இடத்தில் சிரித்துக் கொண்டே விளக்கம்கொடுக்க, அதனை துளியும் ஏற்கவில்லை அமித் ஷா. மாறாக, தன்னுடைய ஆர்டரை மட்டும் தெளிவாக தமிழிசைக்கு சொல்லிவிட்டார்.

கோபத்துக்கு காரணம் என்ன?

அமித் ஷா கோபத்துக்கு காரணம் இருக்கிறது. தமிழிசை சவுந்திர ராஜன் அண்மைக்காலமாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். அவருக்கு எதிராக பேசி வருவதுடன் அண்ணாமலை வைத்திருக்கும் வார்ரூம் ஆட்களுக்கு கடும் எச்சரிக்கையையும் கொடுத்தார். தலைவர்களை அவதூறாக பேசக்கூடாது, விமர்சிக்கக்கூடாது என்றெல்லாம் பாஜக வார்ரூம்க்கு எச்சரிக்கை விடுத்ததுடன், அண்ணாமலை தலைவராக வந்தவுடன் குற்றச்செயல்களில் தொடர்புடையவர்கள் பெருமளவில் கட்சியில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் பகிரங்கமாக குற்றம்சாட்டினார் தமிழிசை. இதனால், தமிழ்நாடு பாஜகவில் உட்கட்சி பூசல் வெட்ட வெளிச்சமானது. தமிழிசைக்கு ஆதரவாக ஒரு தரப்பினர் திரள, அண்ணாமலை தரப்பு இந்த விஷயத்தை டெல்லி தலைமையின் கவனத்துக்கு எடுத்துச் சென்றது.

டெல்லி உத்தரவு

அண்ணாமலை நடவடிக்கைகள் மீது டெல்லி பாஜக தலைமை அதிருப்தியில் இருந்தாலும், தமிழிசை விஷயத்தில் அண்ணாமலைக்கு ஆதரவாகவே இருக்கிறதாம். கட்சி விஷயத்தை எப்படி பொதுவெளியில் பேசலாம்?, அதிருப்தி இருந்தால் டெல்லி தலைமையிடம் வந்து கூறலாம் அல்லது கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசலாம், அதனை விடுத்து தமிழிசை மீடியாவில் பேசியது கட்சி கட்டுப்பாட்டுக்குஎதிரானது என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி தலைமையிடம் பற்ற வைத்தது அண்ணாமலை தரப்பு. இதனைக் கேட்டுக் கொண்ட அமித் ஷா உள்ளிட்டோர் தமிழிசை தமிழ்நாடு பாஜக தொடர்பான கட்சி விஷயங்களில் தலையிட கூடாது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அதன் தொடர்ச்சி தான் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் தமிழிசையை பார்த்தையும் தன்னுடைய கோபத்தை நேரடியாகவே காட்டியிருக்கிறார் அமித் ஷா. 

தமிழிசை தேசிய அரசியலுக்கும் செல்லக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

Previous Post

ஆபத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டம்: இலக்குகளை அடைய தினமும் 6,000 வீடுகள் கட்ட வேண்டும்..

Next Post

நோயாளிகளின் உடல்நலப் பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்… ஓராண்டுக்கு நீட்டித்த மத்திய அரசு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நோயாளிகளின் உடல்நலப் பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்… ஓராண்டுக்கு நீட்டித்த மத்திய அரசு!

நோயாளிகளின் உடல்நலப் பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்... ஓராண்டுக்கு நீட்டித்த மத்திய அரசு!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    🌹🌹🌹🌹

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In