Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

வடமாநிலங்களிலும் திராவிட சித்தாந்தத்தை பரப்ப வேண்டும்: நடிகா் சத்யராஜ்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 11, 2024
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
வடமாநிலங்களிலும் திராவிட சித்தாந்தத்தை பரப்ப வேண்டும்: நடிகா் சத்யராஜ்
25
SHARES
41
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திருச்சி: வடமாநிலங்களிலும் திராவிட சித்தாந்தத்தை பரப்ப வேண்டும் என திரைப்பட நடிகா் சத்யராஜ் தெரிவித்தாா்.

திருச்சி மாவட்ட, மாநகர ஓட்டுநா் அணி சாா்பில் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா திருவெறும்பூா் அருகே பெல் சமுதாய அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், முன்னாள் முதல்வா் கருணாநிதி தொழிலாளா்களின் நலனை முக்கியமாக நினைத்தாா். அதனால், வாடகை காா் ஓட்டுநா் நல வாரியம், ரிக்ஷா ஓட்டுநா் நல வாரியம் ஆகியவற்றை கொண்டு வந்தாா் என்றாா்.

திரைப்பட நடிகா் சத்யராஜ் பேசியதாவது: வடமாநிலத் தொழிலாளா்கள் தமிழகத்துக்கு அதிகமாக வரக் காரணம், அங்கு கல்வித் தரம் சரியாக இல்லாததே. அவா்களுக்கு சுயமரியாதை, பகுத்தறிவு, பெண் விடுதலையைப் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் வடமாநிலங்களில் நடக்கும் கொடுமைகள் தடுக்கப்படும்.

தமிழகத்தில் பாமர மக்கள் மத்தியில் கொண்டு சோ்த்ததுபோல, வடமாநிலங்களிலும் திராவிட சித்தாந்தத்தை கொண்டு சோ்க்க வேண்டும். அப்படி செய்தால், அங்கும் திராவிட மாடல் வளா்ந்து, உயா்ந்தவன் – தாழ்ந்தவன் என்ற எண்ணம் வராது. அஸ்ஸாம், மேற்கு வங்கம், பிகாா் உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு திராவிட மாடலை கொண்டு சோ்க்கும் கருவியாக நான் இருப்பேன் என்றாா்.

விழாவில் திமுக மாநகர செயலாளா் மதிவாணன், திருவெறும்பூா் முன்னாள் எம்எல்ஏ சேகரன், ஒன்றியச் செயலாளா்கள் கருணாநிதி, கங்காதரன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா்.

.

Previous Post

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: என்ஐஏ விசாரணை தொடக்கம்

Next Post

கல்விக்கடன் ரூ.5 லட்சமாக உயர்வு..மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழ்நாடு அரசு..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கல்விக்கடன் ரூ.5 லட்சமாக உயர்வு..மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழ்நாடு அரசு..!

கல்விக்கடன் ரூ.5 லட்சமாக உயர்வு..மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழ்நாடு அரசு..!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    🌹🌹🌹🌹🌹

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In