முன்னதாக, தனது தேர்தல் பிரசாரங்களில் ‘’திருச்சூருக்கான ஒரு மத்திய அமைச்சர், இது மோடியின் உத்தரவாதம்” என்ற முழக்கத்தின் மூலம், தன்னை வெற்றி பெறச் செய்தால் திருச்சூர் தொகுதியிலிருந்து ஒரு மத்திய அமைச்சராக தான் பதவியேற்பேன் என்று குறிப்பிட்டிருந்தார் சுரேஷ் கோபி.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய 3 மாநிலங்களையும் சேர்த்து மொத்தமுள்ள 60 மக்களவை தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரேயொரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து மத்திய அமைச்சரவையில் தென் இந்தியாவின் பாஜக பிரதிநிதியாக சுரேஷ் கோபி இடம்பெற அதிக வாய்ப்பிருப்பதாகவே பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
