இதற்கு முன்னதாக, கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடரில் நெதர்லாந்து அணி இலங்கைக்கு எதிராக 39 ரன்களுக்கு ஆட்டமிழந்ததே டி20 உலகக் கோப்பையில் ஒரு அணி மிகக் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்ததாக இருந்தது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்ததன் மூலம் நெதர்லாந்தின் மோசமான சாதனையை உகாண்டா சமன் செய்துள்ளது.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் மிகக் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்த அணிகள்
நெதர்லாந்து – 39 ரன்கள் – இலங்கைக்கு எதிராக, 2014
உகாண்டா – 39 ரன்கள் – மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக, 2024
நெதர்லாந்து – 44 ரன்கள் – இலங்கைக்கு எதிராக, 2021
மேற்கிந்தியத் தீவுகள் – 55 ரன்கள் – இங்கிலாந்துக்கு எதிராக, 2021
உகாண்டா – 58 ரன்கள் – ஆப்கானிஸ்தானுக்கு எதிராக, 2024
