இந்த கூட்டம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கூறுகையில், “காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், 2024 தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்ய உள்ளோம். மாலை 5:30 மணிக்கு நடைபெறும் காங்கிரஸ் பாராளுமன்றக் குழு கூட்டத்தில், நாடாளுமன்றக் குழுத் தலைவரை தேர்ந்து எடுப்போம். லோக்சபாவில், ராகுல் காந்திக்கு பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் அனைவரும் நினைக்கிறோம். அவர் இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டால், அவர் 234 எதிர்க்கட்சி எம்.பிக்களை வழிநடத்துவார். சென்ற நாடாளுமன்ற மக்களவையில், தனிப்பெரும் கட்சியாக இருந்த பாஜக தற்போது பெரும்பான்மையை இழந்து உள்ளது. சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமாரை நம்பி ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்திய கூட்டணி தலைவர்கள் பொறுத்திருந்து பார்க்க முடிவு செய்துள்ளனர், சரியான நேரத்தில் முடிவெடுப்போம் என கூறினார்.
